ஜாக்லின் வாயால் பாதிக்கப்பட்ட ஒட்டு மொத்த பெண்கள் குழு- ஆண்கள் குழு வைத்த ஆப்பு
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது . தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்து தான். விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி இன்று இரண்டாவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் எல்லோருமே குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார்கள்.
பிக் பாஸ் சீசன் 8:
கடைசியில் ஆண்கள், பெண்கள் கேட்ட பக்கம் விட்டுக் கொடுத்தார்கள். இருந்தாலும், ஒரு வாரம் எந்த ஆண்களையும் எலிமினேஷன் செய்யக்கூடாது என்ற கண்டிசன் போட்டார்கள். இதை பெண்கள் அணி ஏற்று கொண்டாலும் ஜாக்லினுக்கு இதில் உடன்பாடு இல்லை. இப்படி முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்கும், சலசலப்பும் தொடங்கிவிட்டது. பின் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்தது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒவ்வொருவரின் பெயரை நாமினேட் செய்திருந்தார்கள். அந்த வகையில் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதன் பின் முதல் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. இதில் தர்ஷிகா வெற்றி பெற்று இந்த வார தலைவராகி இருக்கிறார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின்,ரவீந்தர்,சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அருண் ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
பிக் பாஸ் 8 ப்ரோமோ:
அதோடு இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆண்கள் vs பெண்கள் டாஸ்க் நடக்கிறது. அதில் ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் போக வேண்டும். இதில் ஜாக்லின்-சுனிதா இடையே சண்டை நடக்கிறது. இரண்டாவது ப்ரோமோவில், ஆண்கள் அணிக்கு பவித்ராவை போக கூடாது என்று ஜாக்லின் சொல்ல, இருவருக்கும் சண்டை வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில், பெண்கள் ஸ்டோர் ரூமிற்க்கு வரவேண்டும் என்றால் ஆண்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
https://youtu.be/1qQiv-ebUgk?si=ezvm16CFp10hJj1t
மூன்றாவது ப்ரோமோ:
இதை கேட்டு எல்லா பெண்களும் ஷாக் ஆகிறார்கள். அப்போது ஆண்கள் அணியில் இருக்கும் பவி, அவர்கள் உப்பு கொடுத்தால் சமைக்க பொருள்கள் தரலாம் என்று சொல்கிறார். ஆனால், ஜாக்லின், நாங்கள் உப்பு கொடுக்க மாட்டோம். எங்களுக்கு சமையல் பொருளும் வேண்டாம் என்று சொன்னவுடன், எல்லாத்தையும் தூக்கி உள்ளே வைக்கிறார்கள். இதை பார்த்து மற்ற பெண்கள் வாயடைத்து போகிறார்கள்.