ஞாபகம் வருதே ஞாபகம் வருதே டாஸ்க்: வெறி கொண்டு விளையாடும் ஆண்கள் vs பெண்கள்- நாமினேஷனில் தப்பித்தது யார்?
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 12 ஆம் நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 12ஆம் நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒருபுறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் சீசன் 8:
மேலும், இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனில் அதில் அதிக வாக்குகளை பெற்று சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, ஜாக்லின், தீபக் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். பின் இரண்டாம் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் சத்யா வெற்றி பெற்றார். அதற்குப்பின் ஆண்கள் அணியில் இருந்து தீபக்கும், பெண்கள் அணியில் இருந்து தர்ஷாவும் இடம் மாறினார்கள். நேற்று எபிசோட்டில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை காண்பிக்க பாட்டு, நடனம், நடிப்பு என்று செய்து இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருக்கிறார். அதில் மூன்று டாஸ்க் கொடுக்கப்படும். யார் அறிவில், திறமையில், டீம் ஒற்றுமையில் சிறந்தவர் என்பதை காண்பிக்க வேண்டும். எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்கள் நாமினேஷனில் இருந்து ஒருவரை காப்பாற்றலாம் என்று அறிவித்தார். இதை அடுத்து குவிஸ் டாஸ்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றார்கள். அதற்கு பிறகு டம்ளரை அடுக்க பந்தால் தடுக்க வேண்டும். ஆண்கள் அணி சிறப்பாக விளையாடி இருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=se5P1XLGbeQ
முதல் ப்ரோமோ:
இன்னும் ஒரு டாஸ்க் இருக்கிறது. முடிவு நாளை சொல்லப்படும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோவில், ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே டாஸ்க். கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை அதே ஆர்டரில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு அணியில் இருந்தும் மூன்று பேர் போக வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தது. அதன் படி இந்த டாஸ்க்கில் பெண்கள் அணி ஒரு மதிப்பெண் அதிகமாக வாங்கி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.