இரண்டு நேரடி நாமினேஷன், பெயிண்ட் அடித்து நாமினேட் செய்யப்பட்ட 8 பேர் - இந்த வாரம் யார் போவா?

By subhashini · 25/11/2024

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் எட்டாம் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி ஏழு வாரம் முடிந்து 50 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது.

பிக் பாஸ் 8:

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா,சுனிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார்கள். அதில் வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆவார். அதன் பின் குறைவான வாக்குகளை பெற்று ரியா தியாகராஜன் தான் வெளியேறி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், கடந்த ஏழாவது வாரத்தின் தலைவராக மஞ்சரி தேர்வாகி இருந்தார். பின் ஏழாவது வாரத்திற்கான நாமினேஷனில் முத்து, வர்ஷினி நேரடியாக நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். அதற்குப்பின் அருண், ராணவ், சிவா, விஷால், சாச்சனா, சௌந்தர்யா ஆகியோரும் நாமினேட் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள். மேலும், இந்த வாரம் ராஜா- ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் பிக் பாஸ் வீடே கலவரமாக இருந்தது.

வெளியேறிய நபர்:

பின் எலிமினேஷனில் கடந்த வாரம் குறைவான வாக்குகளை வர்ஷினி, சிவகுமார், சாச்சனா பெற்று இருந்தார்கள். ஆண்கள் அணியினர் நாமினேஷன் பிரீ பாஸை வென்று சிவகுமாரை காப்பாற்றி இருந்ததால் அவர் தப்பித்துவிட்டார். இவரை அடுத்து குறைவான வாக்குகள் சாச்சனா பெற்றிருந்தார். அதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு சாச்சனா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் வர்ஷினி தான் எலிமினேட் ஆகி இருந்தார்.

நாமினேட் பட்டியல்:

இந்த நிலையில் எட்டாவது வாரத்திற்கான நாமினேட் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதிக நேரடியாக ஜாக்லின், ரஞ்சித் தேர்வாகி இருக்கிறார்கள். அதன் பின் சிவா, சாச்சனா, அன்ஷிதா, ராயன், ஆனந்தி, மஞ்சரி,விஷால், சத்யா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் இந்த வாரம் யார் வெளியே போக போகிறார்கள்? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full