நீ நல்லவனா காண்பிக்க எங்கள மிதிப்பாயா- அர்னவ் , அருண் பிரசாத் இடையே வெடித்த சண்டை

By subhashini · 16/10/2024

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் பத்தாம் நாளுக்கான மூன்றாம் ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று பத்தாவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ரவீந்தர்வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 8:

அதன் பின் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். இவரின் என்ட்ரியால் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது. மேலும், இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. அதில் அதிக வாக்குகளை பெற்று சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, ஜாக்லின், தீபக் ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். பின் இரண்டாம் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் சத்யா வெற்றி பெற்றார். அதற்குப்பின் ஆண்கள் அணியில் இருந்து தீபக்கும், பெண்கள் அணியில் இருந்து தர்ஷாவும் இடம் மாறினார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

நேற்று எபிசோடில், உருட்டு டாஸ்க்கில் ஆண்கள் அணியினர் 8000க்கு வெற்றி பெற்று 12000த்துக்கு பொருட்களை எடுத்ததால் எனக்கு தோணும் பொருளைதான் சமைக்க கொடுப்பேன். அதை வைத்து இந்த வாரம் சமையுங்கள் என்று பிக் பாஸ் சொன்னவுடன் பெண்கள் அணியினர் சந்தோசப்பட்டார்கள். இதனால் ஆண்கள் அணி மீது தர்ஷா கோபப்பட்டார். பின் சமைப்பதற்கு பெண்கள் அணியில் இருந்து ஜாக்லின், சாச்சனா பெயரை சொன்னார்கள்.

நேற்று எபிசோட்:

அதோடு இந்த வாரம் முழுவதும் இவர்கள் தான் சமைக்கனும், பாத்திரம் விலக்கணும் என்றவுடன் கலவரம் வெடித்தது. பின் சாச்சனா- ஜாக்லின் சேர்ந்து கொண்டு தேவை இல்லாத வேலைகளை செய்தார்கள். இதனால் ஆண்கள் vs பெண்கள் அணியினர் மத்தியில் கலவரம் வெடித்தது. மேலும், முதல் ப்ரோமோவில், முத்து,விஷால், ஆனந்தி இடையே போட்டி நடக்கிறது. அதில் ஒவ்வொருவருமே தங்களுடைய தரப்பு நியாயத்தை சொல்கிறார்கள். அப்போது முத்து பேசும் போது மற்ற போட்டியாளர்கள் செய்த செயலை கோபப்பட்டு, உங்கள் ஃபேவரிசம் இங்கே காட்டாதீர்கள். உங்கள் வன்மத்தை கொட்டாதீர்கள் என்று கத்தி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=speOl4cQJMk

ப்ரோமோ வீடியோ:

பின் இரண்டாவது ப்ரோமோவில் கோபத்தில் ஜெப்ரி, உங்களை ஓட்டு போடுங்கள் என்று நான் கேட்கவில்லை, சிரிக்காதீர்கள். பிக் பாஸ் சொன்னதால் தான் நான் கட்டுப்பட்டு இருக்கிறேன் என்று கத்திவிட்டு சென்று விடுகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில், உன்னை ரொம்ப குழப்ப பார்ப்பார்கள், கவனமாக இரு என்று அர்னவ் சொன்னதாக தர்ஷா சொல்கிறார். உடனே கோபப்பட்டு அருண், எங்களுக்குள்ளே இருந்து உங்களை நல்லவராகவும் எங்களை கெட்டவராகவும் காண்பிக்கிறாயா? என்று இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. பின் தர்ஷாவால் ஆண்கள் அணிக்குள் கலவரம் வெடிக்கிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full