நீங்க அத சொல்லவே கூடாது- தீபக்கிற்கும் ஜாக்லினுக்கும் வெடித்த முதல் சண்டை

By subhashini · 8/10/2024

முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் ஜாக்லின்- தீபத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் வாக்குவாதம் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் எல்லோருமே குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார்கள்.

பிக் பாஸ் சீசன் 8:

கடைசியில் ஆண்கள், பெண்கள் கேட்ட பக்கம் விட்டுக் கொடுத்தார்கள். இருந்தாலும், ஒரு வாரம் எந்த ஆண்களையும் எலிமினேஷன் செய்யக்கூடாது என்று கண்டிசன் போட, பெண்கள் அணி ஏற்று கொண்டார்கள். ஆனால், ஜாக்லினுக்கு இதில் உடன்பாடு இல்லை. இப்படி முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்கும், சலசலப்பும் தொடங்கிவிட்டது. பின் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தது. இது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒவ்வொருவரின் பெயரை நாமினேட் செய்திருந்தார்கள். அந்த வகையில் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதன் பின் முதல் வரத்திற்கான கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. இதில் தர்ஷிகா வெற்றி பெற்று இந்த வார தலைவராகி இருக்கிறார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின்,ரவீந்தர்,சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அருண் ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

ஜாக்லின்- தீபக் சண்டை:

இந்த நிலையில் ஜாக்லின்- தீபக் இடையே ஏற்பட்டிருக்கும் வாக்குவாதம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. ஆர்.ஜே ஆனந்தி தரப்பு நியாயத்தை ஜாக்லின் தீபக் இடம் சொல்ல வந்திருக்கிறார். ஆனால், தீபக் ஆனந்தி செய்தது தவறு. அவர் தடுமாறவில்லை, வேணும் என்று விதியை மீறி நடந்து சென்றிருக்கிறார் என்று சொல்கிறார். ஆனால், ஜாக்லின் யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளவில்லை., எனக்கு ஆனந்தி மீது நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னார்.

கிண்டல் செய்த தீபக்:

உடனே தீபக், நாங்கள் சொல்வதையும் நம்பு என்று கேட்க, என்னால் முடியாது என்று ஜாக்லின் மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. ஒரு கட்டத்தில் கடுப்பான தீபக், விளையாடும் போது ஒழுங்கா கவனிக்கமுள்ள இப்ப ஜாக்லின் சொல்வது ரிவியூ கேட்பது போல இருக்கிறது என்று கிண்டலாக பேசுகிறார். ஜாக்லின் மைதியாகி விடுகிறார். அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அன்றே ஜாக்லீனுக்கும் பெண் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குப்பின் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஜாக்லின் ஏதாவது பேசணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் கடைசி வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பாரா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full