முதல் வார நமினேஷன்- யார்? யாரை? நாமினேட் செய்தது? இதோ முழு லிஸ்ட்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது . தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்து தான். விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சமீபத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த முறை போட்டியாளர்களிடம் டம்மி டிராபி ஒன்றைக் கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபிக் கிடைக்கும் என விஜய் சேதுபதி அனைவரையும் வாழ்த்தி உள்ளே அனுப்பினார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் சீசன் 8:
இதனால் எல்லோருமே குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார்கள். கடைசியில் ஆண்கள், பெண்கள் கேட்ட பக்கம் விட்டுக் கொடுத்தார்கள். இருந்தாலும், ஒரு வாரம் எந்த ஆண்களையும் எலிமினேஷன் செய்யக்கூடாது என்று கண்டிசன் போட, பெண்கள் அணி ஏற்று கொண்டார்கள். இப்படி முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்கும், சலசலப்பும் தொடங்கிவிட்டது. பின் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தது. இது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இதை கேட்டு போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதம் நடந்தது. பின் ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒவ்வொருவரின் பெயரை நாமினேட் செய்திருந்தார்கள். அந்த வகையில் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதன் பின் முதல் வரத்திற்கான கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. அதில் இரண்டு அணிகளில் இருந்து யார் முதலில் சேரில் அமர்கிறார்களோ அவர்கள் தான் தலைவர் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.
நாமினேஷன் பட்டியல்:
இதில் தர்ஷிகா வெற்றி பெற்று இந்த வார தலைவராகி இருக்கிறார். இந்த நிலையில் முதல் வாரத்திற்கான நாமினேஷன் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தார். இதனால் போட்டியாளர்களும் இரண்டு பேரை காரணத்துடன் கூறியிருந்தார்கள். அந்த வகையில்
தர்ஷிகா-ஜாக்லின்,ரஞ்சித்
தீபக்-ஜாக்லின் அன்ஷிதா
சௌந்தர்யா-அருண், அர்னவ்
முத்துக்குமரன்-ரஞ்சித் , அருண்
ஆர் ஜே ஆனந்தி-தீபக், அருண்
சத்யா-ரவீந்தர்,முத்துக்குமரன்
ஜாக்லின்-வி.ஜே விஷால், சுனிதா
ஜெர்பி-சௌந்தர்யா, ரவீந்தர்
தர்ஷா குபதா-சௌந்தர்யா, அர்னவ்
அருண்-ரவீந்தர்,சௌந்தர்யா
அன்ஷிதா-சௌந்தர்யா, ரவீந்தர்
ரவீந்தர்-அன்ஷிதா,ஜெர்பி
பவித்ரா-ரஞ்சித், ஜாக்லின்
வி.ஜே விஷால்-ஜாக்லின், முத்துக்குமரன்
சுனிதா-ஜாக்லின், ரஞ்சித்
அர்னவ்-ரவீந்தர், தீபக்
ரஞ்சித்-ரவீந்தர், முத்துக்குமரன்.
இதில் அதிக வாக்குகளை பெற்று ஜாக்லின், ரவீந்தர், சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அருண் ஆகியோர் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியில் இடம் பிடித்து இருக்கிறார்கள். இதில் யார் இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.