இரண்டு நேரடி நாமினேஷன், மீதம் கன்பெக்ஷன் ரூம் - இரண்டாம் வார நாமினேஷன் லிஸ்ட் இதோ
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஒரு வாரம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதை அடுத்து முதல் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் தர்ஷிகா வெற்றி பெற்று தலைவராகி இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 8:
பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின்,ரவீந்தர்,சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அருண் ஆகியோர் இடம் பிடித்து இருந்தார்கள். அதோடு கடந்த வாரம் ரவீந்தர் செய்த பிராங் தான் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. அதன் பின் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். இவரின் என்ட்ரியால் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது. மேலும், விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களையும் முதல் வாரத்தின் அனுபவத்தை குறித்து கேட்டு பதில் அடியும் கொடுத்திருந்தார்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
குறிப்பாக, ரவீந்தர் செய்த பிராங்க் குறித்து விஜய் சேதுபதி வெளுத்து வாங்கி இருந்தார். பின் ஜாக்லின்- ரஞ்சித்- ரவீந்தர் ஆகிய மூவரில் ரவீந்தர் தான் முதல் வார எவிக்ஷனில் வெளியே போனார். ரவீந்தர் வெளியே வந்தவுடன் ஓவ்வொரு போட்டியாளர் பற்றியும் புட்டு புட்டு வைத்தார். இந்த நிலையில் இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் நடைபெற்று இருக்கிறது. அதில் நேரடியாக ஜாக்லின்,தீபக் தேர்வாகி இருக்கிறார்கள். அந்த பட்டியல் இதோ,
நாமினேஷன் பட்டியல்:
முத்து (Direct Nomination) - ஜாக்லின்
பவித்ரா (Direct Nomination) - தீபக்
சுனிதா - ரஞ்சித், அர்னவ்
ஜாக்லின் - அர்னவ், விஷால்
அன்ஷிகா - ரஞ்சித், விஷால்
சாச்சனா - ஜெஃப்ரி , முத்து
சௌந்தர்யா - முத்து, ஜெஃப்ரி
ஆனந்தி - ரஞ்சித், முத்து
தர்ஷிகா - அர்னவ், ரஞ்சித்
தீபக் - சௌந்தர்யா, பவித்ரா
ரஞ்சித் - சௌந்தர்யா, ஆனந்தி
விஷால் - சாச்சனா, சௌந்தர்யா
அர்னவ் - தர்ஷா, சௌந்தர்யா
ஜெஃப்ரி - சௌந்தர்யா, தர்ஷா
அருண் - சௌந்தர்யா, அன்ஷிதா
சத்யா - சாச்சனா, சௌந்தர்யா
தர்ஷா - ரஞ்சித், ஜெஃப்ரி
இதில் அதிக வாக்குகளை பெற்று தீபக், ஜாக்லின், தர்ஷா, சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, சாச்சனா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள்.