மூன்றாவது வார நாமினேஷனில் வெளியேறப்போகும் பெண் போட்டியாளர் யார்? இத எதிர்பார்க்கவே இல்லை

By subhashini · 26/10/2024

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்றாவது வாரம் தொடங்கி 20 நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை பெற்று சாச்சனா வெளியேறி மீண்டும் உள்ளே வந்தார்.

பிக் பாஸ் 8:

பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார். மூன்றாவது வாரம் 5 ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஆண்கள் அணி கஸ்டமராகவும், பெண்கள் அணி நிர்வாகம் செய்து இருந்தார்கள். பின் ஆண்கள் அணி நிர்வாகமும், பெண்கள் அணி கஸ்டமராகவும் இருந்தார்கள். பின் இரண்டு அணியில் இருந்து டாஸ்க்கில் சிறப்பாகவும் மோசமாகவும் விளையாடிய போட்டியாளர்களை தேர்வு செய்து விளையாடி இருந்தார்கள்.

நாமினேஷன் ப்ரீ பாஸ் டாஸ்க்:

மேலும், இந்த வாரமும் நாமினேஷன் ப்ரீ பாஸ் டாஸ்க் நடந்தது. அதில் முதல் டாஸ்கில் ஆண்கள் வென்றார்கள். இரண்டாம் டாஸ்கில் பெண்கள் அணி வென்றார்கள். கடைசியில் மூன்றாம் டாஸ்கில் பெண்கள் அணி தான் வென்றார்கள். கடந்த வாரமும் இந்த நாமினேஷன் ப்ரீ டாஸ்கை பெண்கள் அணி தான் வென்று இருந்தார்கள். அதில் ஜாக்லின் காப்பாற்றப்பட்டார். இறுதியில் ஓட்டிங்கில் கடைசி நான்கு இடத்தில் அன்ஷிதா, ஜாக்லின், தர்ஷா, பவித்ரா ஆகியோர் தான் இருந்தார்கள்.

காப்பாற்றப்பட்ட நபர்:

இதில் பெண்கள் அணி முடிவு எடுத்து பவித்ரா காப்பாற்றப்பட்டு இருப்பதால் இந்த வார நாமினேஷனில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் மூன்றாம் வாரத்தில் இருந்து வெளியேறி நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த வாரம் முத்துக்குமரன், அருண், சௌந்தர்யா, அன்சிதா, சத்யா, தர்ஷா, குப்தா, ஜாக்லின், பவித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள்.

வெளியேற்றப்படும் நபர்:

இதில் பவித்ரா காப்பாற்றப்பட்டு விட்டார். அதற்குப்பின் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று தர்ஷா தான் வெளியேற இருக்கிறார். இது தொடர்பாக கூட முன்னாள் பிக் பாஸ் ஐசுவின் தந்தை பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், தைரியமாக இரு தர்ஷா. உன் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார். இதன் மூலம் தர்ஷா தான் இந்த வாரம் எலிமினேட் ஆக இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

behindtalkies AMP · Quick view
View full