இரண்டு நேரடி நாமினேஷன், மீதம் கன்பெக்ஷன் ரூம்– மூன்றாம் வார நாமினேஷன் லிஸ்ட் இதோ

By subhashini · 21/10/2024

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இரண்டு வாரம் முடிந்து மூன்றாவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். மேலும், இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக ஓட்டு பெற்று சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வந்து விட்டார். பின் முதல் வாரத்திற்கான எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் 8:

மேலும், இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனில் அதில் அதிக வாக்குகளை பெற்று சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, தர்ஷா, சாச்சனா, ஜாக்லின், தீபக் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். கடந்த வாரம் பிக் பாஸ் டாஸ்க் கொடுத்த டாஸ்கில் பெண்கள் அணி வென்று ஜாக்லினை காப்பாற்றினார்கள். பின் நேற்று எபிசோடில் வழக்கம் போல் விஜய் சேதுபதி போட்டியாளர்களை வைத்து செய்தார். குறிப்பாக, சம்பந்தி பஞ்சாயத்து விறுவிறுப்பாக இருந்தது.

நேற்று எபிசோட்:

அதற்கு பின் ஜாக்லின் செய்த தவறை சுட்டி காட்டி இருந்தார். பின் தர்ஷா-அர்னவ் பேசிய விஷயத்தை குறித்து விஜய் சேதுபதி பேசியிருந்தார். அதற்கு பின் பிபி அவார்டுகள் குறித்து ஆண்களிடம் கேட்டபோது அவர்கள் எல்லா பட்டத்தையும் அர்னவுக்கு கொடுத்திருந்தார்கள். இதைப் பற்றி விஜய் சேதுபதி கேட்டதற்கு பெருமையாக இருக்கிறது என்ற அர்னவ் சொல்ல, இதில் என்ன உங்களுக்கு பெருமை என்று நக்கலாக பதில் அளித்து இருந்தார். கடைசியில் கடந்த வார பஞ்சாயத்து எல்லாம் முடிந்தவுடன் அர்னவ் வெளியேறினார்.

விஜய் சேதுபதி சொன்னது:

அர்னவ் வெளிவந்த பிறகு, ஜால்ரா பாய்ஸ். சத்யா, விஷால், தீபக் எல்லோருமே ஜால்ரா பாய்ஸ். டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க என்று பேசிக் கொண்டிருந்தார். உடனே விஜய் சேதுபதி குறுக்கிட்டு, எதற்கு அநாகரீகமாக பேசுகிறீர்கள். உங்களுடைய கருத்தை சொல்லுங்கள், வன்மத்தை கொட்டாதீர்கள். அது ரொம்ப தவறு என்று அறிவுரை சொல்லி இருந்தார். மேலும், இன்றைக்கான ப்ரோமோவில் ஆண்கள் அணியில் இருந்து ஜெப்ரி, பெண்கள் அணியில் இருந்து சாச்சனா இடம் மாறி இருந்தார்கள்.

மூன்றாவது வாரம் நாமினேஷன்:

இந்த நிலையில் மூன்றாம் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் நடைபெற்று இருக்கிறது. அதில் நேரடியாக தர்ஷா, அருண் தேர்வாகி இருக்கிறார்கள்.
ஜாக்லின்-5 ஓட்டுகள்
அன்ஷிதா-5 ஓட்டுகள்
பவித்ரா ஜனனி-2 ஓட்டுகள்
சத்யா - 5 ஓட்டுகள்
முத்துக்குமரன்- 2 ஓட்டுகள்
சௌந்தர்யா- 6 ஓட்டுகள்
இதில் இந்த வாரம் சத்யா, அருண், தர்ஷா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full