யார் மேனேஜர், சுயமாக யோசிக்காதவர்கள் - பிக் பாஸ் கொடுத்த பட்டத்தால் வீட்டுக்குள் நடந்த கலவரம்

By subhashini · 27/10/2024

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்றாவது வாரம் தொடங்கி 21 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார். மூன்றாவது வாரம் 5 ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இரண்டு அணியும் மாறி மாறி விளையாடி இருந்தார்கள்.

பிக் பாஸ் 8:

அதற்கு பின் இரண்டு அணியில் இருந்து டாஸ்க்கில் சிறப்பாகவும், மோசமாகவும் விளையாடிய போட்டியாளர்களை தேர்வு செய்து விளையாடி இருந்தார்கள். மேலும், இந்த வாரமும் நாமினேஷன் ப்ரீ பாஸ் டாஸ்க் நடந்தது. அதில் முதல் டாஸ்கில் ஆண்கள் வென்றார்கள். இரண்டாம் டாஸ்கில் பெண்கள் அணி வென்றார்கள். கடைசியில் மூன்றாம் டாஸ்கில் பெண்கள் அணி தான் வென்றார்கள். கடந்த வாரமும் இந்த நாமினேஷன் ப்ரீ டாஸ்கை பெண்கள் அணி தான் வென்று ஜாக்லின் காப்பாற்றப்பட்டார்.

நாமினேஷன் ப்ரீ பாஸ் டாஸ்க்:

இந்த வாரம் பெண்கள் அணி முடிவு எடுத்து பவித்ரா காப்பாற்றப்பட்டு இருப்பதால் இந்த வார நாமினேஷனில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். நேற்று எபிசோட்டில், கில்லர் காயின் டாஸ்கில் ஆண்கள் நடந்து கொண்ட விதம் தவறு என்று கண்டித்து விஜய் சேதுபதி பேசியிருந்தார். பின் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து இருந்ததற்கு பாராட்டையும் தெரிவித்திருந்தார்.

https://youtu.be/j5ynlM8hpGY?si=7uWTQ04H7Ek37bUi

முதல் ப்ரோமோ:

இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோவில், 5 ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் டாஸ்க்கில் யார் தங்களுடைய கதாபாத்திரத்தை மீறி வெளிவந்தது என்று கேட்டதற்கு யாருமே பதில் சொல்லவில்லை. உடனே விஜய் சேதுபதி, அவர்களுக்குள்ளே மழுப்பி பேச பார்க்கிறார்கள். முத்துக்குமரன் நீங்கள் சொல்லுங்கள் என்று சொன்னதற்கு அவர் யாருமே செய்யவில்லை என்று சொல்கிறார். உடனே ஜெப்ரியை கேட்டவுடன் அவர் ஒத்துக்கொள்கிறார்.

https://www.youtube.com/watch?v=am_YcIXxlbM

இரண்டாவது ப்ரோமோ:

மேலும், தற்போது வெளியாகிருக்கும் இரண்டாவது ப்ரோமோவில், இந்த வீட்டில் யார் மேனேஜராக இருக்க நினைக்கிறீர்கள்? எந்த வேலையும் செய்யாமல் சுத்தி கொண்டிருப்பவர்கள் யார்? சுயமாக யோசிக்காமல் மற்றவர்கள் பேச்சை கேட்பவர்கள் யார்? என்ற அடிப்படையில் நீங்கள் பட்டங்களை கொடுக்கலாம் என்று சொன்னவுடன் ஒவ்வொரு போட்டியாளருமே மற்றவர்களுக்கு பட்டம் கொடுத்திருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full