ஆதிரைக்கு பிக் பாஸ் 9 நிகழ்ச்சி அள்ளிக்கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By subhashini · 27/10/2025

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஆதிரை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 22 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நந்தினி வெளியேறினார்.

பிக் பாஸ் 9:

பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். இதற்கிடையில் கேப்டன் டாஸ்க் நடைபெற்று இருந்தது. இதில் துஷார் தான் வெற்றி பெற்று வீட்டின் தலைவரானார். பின் பிக் பாஸ், டிசிபிலின் இல்லை என்று தல பதவியை பறித்தார். பின் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இரண்டாவது வாரம் குறைவான வாக்குகளை பெற்று அப்சரா தான் வெளியேறி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இந்த வாரம்
வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என்று பிக் பாஸ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும், மூன்றாவது வாரம் நடந்த நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று ஆதிரை தான் வெளியேறி இருந்தார். கடந்த வாரம் ஆதிரையினுடைய நடவடிக்கைகள் எதுவுமே சரியில்லை என்று விமர்சித்து இருந்தார்கள்.

ஆதிரை சம்பளம்:

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் ஆதிரை வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க ஆதிரைக்கு ஒரு நாளைக்கு 12,000 முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இவர் மொத்தம் பிக் பாஸ் வீட்டுக்குள் 21 நாட்கள் இருந்திருக்கிறார். ஆக மொத்தம் இவருக்கு 3,15,000 பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் அதிக தொகையை வாங்கிய போட்டியாளர் ஆதிரை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full