அதிரடியாக நடந்த டபுள் எவிக்ஷன் - இந்த வாரம் பிக் பாஸை விட்டு போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 75 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.
இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.
பிக் பாஸ் 9:
மேலும், நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து இருப்பதால் போட்டியாளர்கள் மத்தியில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது. கடந்த வாரம் கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் மீது வழக்குகளை தொடர்ந்து கேஸ் நடத்தி இருந்தார்கள். கடைசி இரண்டு நாட்கள் சண்டை வந்ததால் பிக் பாஸ் கொந்தளித்து வார்னிங் கொடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கம்ருதீன், பார்வதி இருவருமே வார்னிங் கொடுத்தும் மைக் மறைத்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இதனால் கோபப்பட்ட பிக் பாஸ் பால், முட்டை உள்ளிட்ட சில பொருட்களை மொத்த பேருக்கும் ரத்து செய்து விட்டார். பின் மற்ற போட்டியாளர்கள் பயங்கர கோபத்தில் இருந்தார்கள். பின் பத்தாவது வாரத்தில் நாமினேஷனில் முதலில் ரம்யா வெளியேறினார். பின் வியானா இரண்டாவதாக வெளியேறி இருந்தார். டபுள் எவிக்ஷன் நடந்தது. மேலும், இந்த வாரம் கானா வினோத் கேப்டன் டாஸ்கில் வென்று வீட்டு தல ஆகி இருக்கிறார்.
வெளியேறும் நபர்:
பின் 11வது வாரத்தில் நடந்த நாமினேஷனில் கானா வினோத், விக்ரம் தவிர சான்ட்ரா, fj, பார்வதி, கம்ருதீன், சபரி,அமித், திவ்யா, ஆதிரை, கனி, சுபிக்ஷா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது
வெளியாகி இருக்கிறது. அதாவது, இதுவரை நடந்த வாக்குகளின் கணக்கெடுப்பின்படி எப் ஜே மற்றும்
ஆதிரை தான் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார். இவர்கள் இருவரும் இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்கள்.