நேரடியாக நடந்த ஐந்தாவது வாரம் நாமினேஷன் – யார் யார் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ

By subhashini · 3/11/2025

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஐந்தாவது வாரம் நாமினேஷன் பட்டியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 29 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

பிக் பாஸ் 9:

நேற்று வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது. வீட்டில் உள்ள ஒவ்வொரு போட்டியாளர்களைப் பற்றியும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. அதிலும் விஜே பார்வதி முகத்திரையை கிழித்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இதனால் விஜே பார்வதி, வைல்ட் கார்ட் போட்டியாளர்களை பற்றி அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார்
இது ஒரு பக்கம் இருக்க, ஐந்தாவது வாரத்தினுடைய கேப்டன் தேர்வுக்கான டாஸ்க் நடைபெற்றிருக்கிறது. இதில் திவ்யா கணேசன் தான் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் கேப்டன் ஆன உடனே சில விதிமுறைகளை வைத்திருக்கிறார். ஆனால், வழக்கம் போல பார்வதி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஐந்தாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றிருக்கிறது.

https://youtu.be/-_I8fG0ZyUU?si=7tiuq4PTALwTND5q

நாமினேஷன் பட்டியல்:

இதில், கனி - பார்வதி, திவாகர்
சபரி - கம்ருதீன், திவாகர்
விக்ரம் - திவாகர், பார்வதி
ரம்யா - திவாகர், துஷார்
அரோரா - திவாகர், பார்வதி
சுபிக்ஷா- திவாகர், பார்வதி
அமித் பார்கவ் - வியானா, பார்வதி
திவாகர் - சபரி, ரம்யா
வியானா - சபரி, Fj
கம்ருதீன் - விக்ரம், கெமி
பிரவீன் - திவாகர், பார்வதி
சான்ட்ரா - திவாகர், பார்வதி
கெமி - திவாகர், பார்வதி
வினோத் - திவாகர், பார்வதி
துஷார் - பிரவீன், வினோத்
Fj - திவாகர், வியானா
பார்வதி - விக்ரம், கெமி
திவ்யா - திவாகர், பார்வதி
ப்ரஜின் -திவாகர், பார்வதி
இதில் வினோத், பிரவீன், கம்ருதீன், ரம்யா, fj ,சபரி, வியானா, கெமி, விக்ரம், பார்வதி, துஷார், திவாகர் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full