முதல் வாரம் பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் இவர் தான்? இத எதிர்பார்க்கல
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரம் வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்கி 6 நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.
இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கி இருந்தது. பின் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா ,ஆதிரை , அப்சரா , பிரவீன் ராஜ் , பிரவீன் காந்தி, திவாகர், கலையரசன் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருந்தார்கள்.
நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது.
பிக் பாஸ் 9:
இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருக்கிறார். தவிர்க்க முடியாத காரணங்களால் தான் இவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்குள் நுழைந்த முதல் நாளில் இருந்தே மற்ற போட்டியாளர்களுடன் மிங்கில் ஆகாமல் தனியாக தான் இருந்தார். பின் திடீரென்று நந்தினி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதற்கு காரணம் பிக் பாஸ் வீடு பொய்யாக இருக்கிறது, போட்டியாளர்கள் நடிக்கிறார்கள் என்று எல்லாம் கூறி இருந்தார்.
நந்தினி வெளியேற்றம்:
இப்படி இருக்கும் முதல் வார எவிக்ஷன் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முந்தைய சீசனங்களில் முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி என்று எவிக்ஷன் நடைபெறாது என்று பிக் பாஸ் சொல்வார். அந்த வகையில் இந்த சீசனில் முதல் எவிக்ஷன் இருக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். இன்று முதல் வார எவிக்சனுக்கான சூட்டிங் நடைபெற்று இருக்கிறது.
முதல் வாரம் வெளியேறியவர்:
இந்த வாரம் திவாகர், கலையரசன் ஆகியோரில் ஒருவர் தான் வெளியேறுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில் ரசிகர்களிடம் வந்த ஓட்டுகளின் அடிப்படையில் இயக்குனர் பிரவீன் காந்தி தான் முதல் வாரம் எலிமினேட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. இதை டிவியில் நாளை ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.