பிக் பாஸ் 9: முதல் வார நாமினேஷன்- யார்? யாரை? நாமினேட் செய்தது? இதோ முழு லிஸ்ட்
தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டு சீசன்கள் முடிவடைந்து தற்போது ஒன்பதாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இன்று நிகழ்ச்சியின் முதல் நாள் தொடங்கி விறுவிறுப்பாக செல்கிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள்.
கேப்டனுக்கு தனி அறை, ரூமுக்குள்ளே ஜக்குசி, ஒவ்வொரு அறையிலும் வித்தியாசமான உருவங்கள், பொருட்களை எல்லாம் வைத்து இந்த முறை வாயைப் பிளக்கும் வகையில் பிக் பாஸ் வீடு இருக்கிறது. பிரம்மாண்டமாக நேற்று பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி போட்டியாளர்களுடைய அறிமுகமும் நடைபெற்று இருந்தது. ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றிய விவரம், டான்ஸ், கொண்டாட்டம் என்று நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.
பிக் பாஸ் 9:
மேலும், இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். வீட்டுக்குள் சென்ற ஒவ்வொரு போட்டியாளர்களுமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் சென்று விட்டது.
நாமினேஷன் லிஸ்ட்:
இப்படி இருக்கும் நிலையில் இன்று முதல் நாளே நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதில்,
சம்ருதீன் - திவாகர், அப்சரா
சுபிக்க்ஷா - வியானா, கலையரசன்
பிரவீன் காந்த் - திவாகர், பிரவீன்
ரம்யா ஜோ - திவாகர், ஆதிரை
கானா வினோத் - கலையரசன், அப்சரா
துஷார் - அப்சரா, கலையரசன்
அரோரா - திவாகர், கலையரசன்
பிரவீன் ராஜ் - பிரவீன் காந்தி, கலையரசன்
திவாகர் - பிரவீன் ராஜ், கெமி
கெமி - திவாகர், சபரி
விக்ரம் - பிரவீன் காந்தி, கலையரசன்
கனி - ஆதிரை, வியானா
FJ - பிரவீன் காந்தி, கலையரசன்
அப்சரா - அரோரா, கலையரசன்
VJ பார்வதி - கனி, பிரவீன் காந்தி
சபரி - பார்வதி, கலையரசன்
வியானா - பிரவீன் ராஜ், கலையரசன்
கலையரசன் - திவாகர், ஆதிரை
நந்தினி - வியானா, கலையரசன்
ஆதிரை - திவாகர், கலையரசன்
வாக்குகள் அதிகம் வாங்கியவர்கள்:
இதில் வியானா - 3
ஆதிரை - 3
அப்சரா - 3
பிரவீன் ராஜ் - 3
பிரவீன் காந்தி - 4
திவாகர் - 7
கலையரசன் - 12 வாக்குகள் பெற்று இருக்கிறார்கள். இதில் யார் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.