அந்த கமிட்மென்ட்டால் தான் கெமி அவசரமாக வெளியேறினாரா? உண்மையை போட்டுடைத்த நிகழ்ச்சி

By subhashini · 26/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 52 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று கெமி தான் வெளியேறி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரபலமான நபர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்தவர் கெமி.

பிக் பாஸ் 9:

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னாள். கூடை பந்து வீராங்கனை. அதனை எடுத்து இவர் படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த பிரபலத்தின் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இவர் நிகழ்ச்சியில் நன்றாகத்தான் விளையாடி வந்தார். எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதை சிறப்பாக தான் செய்து வந்தார். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து கெமி வெளியேறி இருந்தார். இவர் வெளியேறியது நியாயமே இல்லை என்றெல்லாம் கமெண்ட்ஸ் போட்டு இந்தார்கள். மேலும், கெமி வெளியேறியதற்கு இன்னொரு ஒரு முக்கிய காரணம் இருக்கு.

கெமி குறித்த தகவல்:

இவர் ஒரு பெரிய திரைப்படத்தில் கமிட்டாகி இருப்பதாகவும், அந்த படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் தான் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அதோடு கடந்த வாரம் கெமிக்கு பதில் ரம்யா தான் வெளியேறுவதாக கூறப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் கெமி வெளியேறியது தொடர்பாக நிகழ்ச்சிக்கு நெருக்கமானவர்கள் அளித்த பேட்டியில், கெமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போடும்போது அவர் திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி இருந்தார்.

கெமி வெளியேற்றம்:

படத்தின் தயாரிப்பு தரப்பில் பிக் பாஸ் செல்வதற்கு முன்பே சூட்டிங் தொடர்பாக கெமியிடம் பேசி இருந்தார்கள். ஆனால் செடியுலில் ஏதாவது மாற்றம் வரும். அதனால் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் கெமி பிக் பாஸில் கலந்து கொண்டார். சம்பந்தப்பட்ட படகுழு சூட்டிங்க்கு தயாராகி விட்டதால் சேனல் தரப்பில் பேசி கெமியை எவிக்ட் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் கெமி வெளியேறி இருந்தார். உண்மையிலேயே கடந்த வரம் ரம்யா தான் வெளியேற இருந்தது என்று கூறி இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full