'NON SENSE மாதிரி பண்ணாங்க' குக் வித் கோமாளியில் விலகிய காரணத்தை சொன்ன பார்வதி

By subhashini · 12/10/2025

விஜய் டிவியில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி தொடங்கி 7 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கி இருந்தது. பின் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா ,ஆதிரை , அப்சரா , பிரவீன் ராஜ் , பிரவீன் காந்தி, திவாகர், கலையரசன் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருந்தார்கள்.
நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது.

பிக் பாஸ் 9:

பின் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். தவிர்க்க முடியாத காரணங்களால் தான் இவர் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வாரத்திற்காக நடந்த தலைவர் கான போட்டியில் தூஷர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்பாக விஜே பார்வதி பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by THAMIZHAN (@thamizhanthepresident)

பார்வதி சொன்னது:

அதாவது பார்வதி, குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கனி அவர்களுக்கு தான் கோமாளியாக சென்று இருந்தேன். நான் காமெடியாக பேசுவேன். ஆனால், எப்போதும் என்னால் கன்டென்ட், காமெடியாக செய்ய முடியாது. ஒரு நான்சென்ஸ் மாதிரி செய்கிறார்கள். அது எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. குறிப்பாக, கெட்டப் என்ற பெயரில் அவர்கள் செய்ய சொன்னது எனக்கு விருப்பமே கிடையாது. அதனால்தான் நான் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டேன் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

வெளியேற காரணம்:

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த விஜே பார்வதி ஒரு சில எபிசோடுகள் தான் வந்திருந்தார். அதற்கு பின் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியின் இறுதியின் போது கூட பார்வதி வரவில்லை. இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பார்வதி, நான் காமெடியன் கிடையாது.
எப்போது பார்த்தாலும் கன்டென்ட் காமெடி கொடுக்கும் ஆள் நான் கிடையாது என்றெல்லாம் கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full