சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் வீட்டுக்கு போகும் நடிகர்கள்? வைல்டு கார்டு என்ட்ரி லிஸ்ட் இதோ

By subhashini · 25/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 20 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி, இரண்டாவது வாரம் எவிக்ஷனில் அப்சரா தான் வெளியேறி இருந்தார்கள்.

பிக் பாஸ் 9:

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இந்த வாரம்
வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என்று பிக் பாஸ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த சீசன் சூடு பிடிக்காமல் மெதுவாக செல்வதால் டிஆர்பி ரேட்டிங் கூட சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த மூன்றாவது வாரத்திலேயே வைல் கார்டு போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் போட்டியாளர்களின் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் சீரியல் நடிகை திவ்யா கணேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள் போக இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதற்கு முன்பே இவர் பல சீரியல்கள் நடித்திருந்தார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் என்ற சீரியலில் நடித்து வந்தார்.

வைல்ட் கார்ட் என்ட்ரி:

பின் திடீரென்று இவர் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். இவருடைய விலகலுக்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கலந்து கொள்வதுதான் என்று கூறப்படுகிறது. இவரை அடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் பிரபல நடிகர் பிரஜன் உள்ளே செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கெட்டிமேளம் சீரியலில் நடித்து வந்த சிபு சூரியனுமே சீரியலை விட்டு விலகி இருக்கிறார். இவருடைய விலகியதற்கு காரணமும் இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full