பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். ஆனால், அவரிடம் இருந்து பட்டம் பறிக்கப்பட்ட நிலையில் அதே போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இவரிடம் தான் அந்த பட்டம் கொடுக்கபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது பல விஷியங்களை கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தான் சமீபத்தில் மடல் அழகி சனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமான நிலையத்தில் ஏற்பட்ட கசப்பான விஷியத்தை பற்றி விடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

குறிப்பிட்ட மதத்தை குறிவைக்கின்றனர் :

அதாவது நடிகை சனம் கோவையில் இருந்து சென்னை செல்வதற்கு கோவை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு சோதனை நடத்திக்கொண்டிருந்த பெண் அதிகாரி ஒருவர் இவருடைய கைப்பை மற்றும் சில குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களின் கைபையை மட்டும் சோதனை செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது குடியரசு தினம் வருவதினால் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

அவமானப்படுத்தி விட்டனர் :

இந்த நிலையில் எப்படி அந்த இரண்டு நபர்கள் மட்டும் ஆபத்தான ஆயுதங்களை கொண்டுவர முடியும். மற்றவர்களால் கொண்டுவர முடியாதா? மற்றவர்களை விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நபர்களை, அதுவும் குறிப்பிட்ட ஒரு மதத்தை சார்ந்தவர்களை மட்டும் அப்படி ஏன் செய்யா வேண்டும், அப்படி செய்தது அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் இருந்ததாக கூறினார். ஒருவேளை எல்லோரையும் சோதனை செய்திருந்தால் அதனை தான் வரவேற்பதாகவும், ஆனால் அவர்களை மட்டும் சோதனை செய்தது தனக்கு வருத்தமாக இருந்ததாக கூறினார்.

Advertisement

அதிகாரியின் விளக்கம் :

இதுகுறித்து கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், வரும் 26ஆம் தேதி இந்தியா முழுவதும் குடியரசு தினம் கொண்டாட படுவதினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்தில் திடீர் சோதனை நடத்த அறிவுறுத்த பட்டதாக கூறினார். மேலும் நடிகை சனம் சொல்வது போல குறிப்பிட்ட நபர்களை மட்டும் பரிசோதனை செய்யவில்லை என்றும் தெரிவித்த ஆவர் இருந்தாலும் இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்தார்.

Advertisement

Advertisement