கோலாகலமாக நடந்து முடிந்த பிக் பாஸ் அமீர்- பவானி திருமணம் , வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 20/4/2025

பிக் பாஸ் அமீர்- பாவனியின் திருமண புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர்கள் பாவனி- அமீர். பாவனி அவர்கள் ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:

இருந்தும் அவரை இறுதி சுற்று வரை ரசிகர்கள் அனுப்பி வைத்து இருந்தார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர், பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Amir A D S (@amir__ads)

அமீர் – பாவனி காதல்:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ஒரு வழியாக எப்படியோ அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. இருவரும் அஜித்தின் துணிவு படத்தில் கூட நடித்து இருந்தார்கள். தற்போது இருவரும் கூட கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

அமீர் – பாவனி திருமணம்:

மேலும், அமீர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். நான் இந்து மதத்தை சேர்ந்தவர். இருந்தாலும் எங்களுடைய திருமணம் மதம் சார்ந்து நடைபெறவில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவோம். நான் வீட்டில் எல்லா பூஜைகளையும் செய்வேன். அதேசமயம் அவர் நமாசும் செய்வார் என்று பாவனி கூறி இருந்தார். ஏற்கனவே பாவனி கன்னட சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்திருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்கொலை செய்து கொண்டார்.

குவியும் வாழ்த்துக்கள்:

இப்படி இருக்கும் நிலையில் இன்று அமீர்-பாவனியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இதில் பிரியங்கா தன்னுடைய கணவருடன் கலந்துகொண்டு நாத்தனார் முறையில் இருந்து நடத்தி வைத்திருக்கிறார். இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தற்போது பாவனி-அமீர் திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full