அரோரா இருக்க இடத்துல தான் அவனும் இருப்பான் - பிக் பாஸ் அப்சரா எஸ்குளூசிவ் தகவல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 17 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். மேலும், இரண்டாவது வாரத்திற்கான எவிக்ஷனில் குறைவான வாக்குகளை அப்சரா தான் வெளியேறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அப்சரா அளித்திருக்கும் பேட்டியில், இரண்டாவது வாரமே நான் வெளியே வந்து விட்டேன். சின்ன வருத்தம் எனக்குள் இருக்கிறது. நான் ஏழு வருஷமாக மாடலிங் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இதற்குப் பிறகு கேரியரில் அடுத்த ஸ்டெப் போகணும் என்று யோசித்தேன்.
பிக் பாஸ் 9:
அப்போதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தேன். நம்ம இந்த நிகழ்ச்சிக்கு சரியான நபர் என்று தான் தெரியும். ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் சகஜமாகி ஆட்டத்தை தொடங்க நேரம் எடுத்தது. நான் ஆட்டத்தை தொடங்கின அப்பவே எலுமினேட் ஆகி வந்துவிட்டேன். போய் நல்லா விளையாடனும், தேவையான இடங்களில் சண்டை செய்யணும் என்று எனக்குத் தோன்றியது. நான் பிக் பாஸ் வீட்டுக்குள் அமைதியாக இல்லை. முதல் நாளில் இருந்து நிறைய விஷயங்கள் செய்தேன். லைவ் பார்த்தவர்களுக்கு அது தெரியும். நான் பேசிய பல விஷயங்களை சபைக்குள் அந்த விஷயத்தை பேசி இருக்கணும். ஆனால் பண்ணாமல் விட்டுட்டேன்.
https://www.youtube.com/watch?v=04EU4VG54BU
அப்சரா பேட்டி:
முதல் நாளில் சுபிக்ஷா, நான் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிற முதல் மீனவ பொண்ணு. அதனால நான் ஜெயிக்கணும் என்று சொன்னார்கள். எனக்கு தப்புன்னு தோனிய விஷயங்களை அப்பவே எதிர்த்து பேசினேன். மக்கள் 24 மணி நேரம் எபிசோட் பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் தான் என்னை வெளியே வர வைத்திருப்பார்கள். வீட்டில் இருந்தவர்கள் யாருமே நான்தான் எலுமினேட் ஆகி போவேன்னு தெரியவில்லை. நான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது மற்ற போட்டியாளர்கள் என்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள். நானும் வியானாவும் ஸ்வீட் என்று சொல்லியே எங்களை சீரியஸ் டிஸ்கசனுக்கு கூப்பிடவே இல்லை. லவ் விஷயத்தை பொறுத்த வகையில் எதுவுமே சொல்ல முடியாது. யார் எப்படி நடந்துப்பாங்கனு தெரியாது.
ஆனால், உள்ள அது நடக்குது.
பிக் பாஸ் பற்றி சொன்னது:
பிரண்ட்ஷிப், லவ்வுன்னு எமோஷனல் பாண்டிங் வந்துட்டாலே கேம் போய்விடும். முதல்வரத்தில் சுபிக்ஷா ரொம்ப நல்லா விளையாடியிருந்தார்கள். ஆனால், வியானா கூட சேர்ந்த பிறகு தான் அவர் டவுன் ஆகி விட்டார். அதே மாதிரி தான் ஆதிரை, துஷார், அரோரா. கேப்டன்சி தொடங்கி பல விஷயத்தில் துஷார் முதல் வாரத்திலேயே கோட்டை விட்டுட்டார். அவருடைய கவனம் முழுவதுமே அரோராகிட்ட தான் இருந்தது. அரோரா இருக்க இடத்துலதான் துஷார் இருப்பான். திவாகர் பொண்ணுங்க கிட்ட போய் லவ் பண்றியா, கல்யாணம் பண்ணியான்னு கேட்கிறது என்று ஏதாவது அவர் பண்ணிக்கிட்டே தான் இருப்பார். பார்வதி சரவெடியா இருக்காங்க. அவங்களைப் பற்றி சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாகவே நெகட்டிவ்வான விமர்சனங்கள் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், பார்வதி நடிக்கவில்லை என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.