சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் அபிராமி- எந்த சேனல், எந்த சீரியல்னு தெரியுமா?
பிரபல நடிகை அபிராமி வெங்கடாசலம் புதிய சீரியலில் கமிட் ஆகி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் பரத நாட்டியத்தில் மிகச்சிறந்த கலைஞர். அழகு, நடனம், முக பாவனை என அனைத்திலும் சிறந்த கலைஞராக இருந்தாலும் நடிகை அபிராமி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார் என்று சொல்லலாம்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி-கவின் காதல், முகினுடன் காதல் என இவரது பிரச்சினை சமூக வலைதளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அதையெல்லாம் மறக்கும் வகையில் அப்போது இவருடைய படம் அமைத்திருந்தது. அதாவது, இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார்.
அபிராமி குறித்து:
அந்தப் படத்தில் நடித்ததின் மூலம் நடிகை அபிராமிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இவர் ராக்கெட்ரி, வான் மூன்று போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாக இருக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அபிராமி நடித்துள்ளார். தற்போது, இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
சீரியலில் அபிராமி:
மேலும், படங்களைத் தொடர்ந்து இவர் விளம்பரம், போட்டோ சூட் என பிசியாக இருக்கிறார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அபிராமி சமீபத்தில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'வீரா' என்ற தொடரில் சிறப்பு வேடத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். அதனை தொர்ந்து இவர் மேலும் ஒரு சீரியலில் கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'நினைத்தேன் வந்தாய்'.
நினைத்தேன் வந்தாய்:
இந்த சீரியல் தொடங்கி சில மாதங்களே ஆனாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் சுடர் கதாபாத்திரத்தில் ஏற்கனவே ஜாஸ்மின் ராத் நடித்திருந்தார். தற்போது, இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், சுடர் கதாபாத்திரத்தில் அபிராமி கமிட் ஆகியுள்ளாராம். தற்போது இவர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுப்பது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நினைத்தேன் வந்தாய்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று நினைத்தேன் வந்தாய். இதில் நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமன் எழில் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு வெற்றிகரமான மருத்துவரான எழில், இந்துமதியை திருமணம் செய்து கொண்டு நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார். பின் இந்துமதி கார் விபத்தில் இறந்துவிட, எழில் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் புறக்கணிக்கிறார். மேலும், இந்து மதியின் ஆன்மா வீட்டில் சுற்றித் திரிந்து குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், குழந்தைகளை கவனிக்க வீட்டிற்கு வரும் சுடர்விழி சரியான பொருத்தமாக இருப்பாளா என்பது தான் கதை.