அது இருந்தா தான் கல்யாணம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்- பிக் பாஸ் புகழ் பிரதீப் ஓப்பன் டாக்

By Rajkumar · 24/8/2024

திருமணம் குறித்து பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி கூறியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பிக் பாஸ் கவினின் நெருங்கிய நண்பரும் ஆவார். நடிகை அதிதி பாலன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 'அருவி' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரதீப் நடித்திருந்தார்.

மேலும், சிவகார்த்திகேயன் தயாரித்த 'வாழ்' என்ற படத்தில் ஹீரோவாக பிரதீப் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது கவின் நடிப்பில் வெளிவந்த 'டாடா' திரைப்படம் தான். இந்த படத்தில் பிரதீப்பின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றிருந்தது. அதோடு இவர் ஆல்பம், நிகழ்ச்சிகள் என்று பங்கேற்று இருக்கிறார். இவருக்கு நடிகர் ஆகுவதை விட இயக்குனர் ஆவதில் தான் அதிக ஆர்வம். அதற்காக இவர் பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார்.

பிரதீப் ஆண்டனி குறித்து:

அதற்குப் பிறகு தான் இவருக்கு 'பிக் பாஸ் 7' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீசனில் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடியிருந்தார். இடையில், இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங் குற்றம் சாட்டியதால், எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் பிக் பாஸ் மற்றும் கமல் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரதீப்:

இதனால், பிரதீப்பின் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியையும், தொகுப்பாளர் கமலையும் வறுத்தெடுத்திருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தான் பிரதீப்புக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக உருவாகி இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலேவுக்கும் கூட பிரதீப் வரவில்லை. அதனால் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வராதது, எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பிரதீப் ஆண்டனி நிச்சயதார்த்தம்:

அதற்குப் பிறகு பிரதீப் நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக இருந்தாலும், கடந்த ஜூன் மாதம் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இவர், தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெண்ணைத்தான் நிச்சயதார்த்தம் செய்திருந்தார். மேலும், தனது எக்ஸ் பக்கத்தில், தனக்கெல்லாம் இது நடக்காது என்று நினைத்ததாகவும் என்னை நம்பியும் பெண் தருகிறார்கள் என்றும் பதிவில் பிரதீப் குறிப்பிட்டிருந்தார். மேலும், 90ஸ் கிட்ஸின் சாதனை என்றும் கூறியிருந்தார்.

பிரதீப் ஆண்டனி திருமணம்:

ஆனால் இதுவரை இவரின் திருமணம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனிடையே ஒரு பேட்டியில் பேசும் போது இவர், அவரது திருமணம் குறித்த கேள்விக்கு, காசு வந்தா தான் கல்யாணம் என்பதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், இப்பதான் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை எடுத்து செய்து வருகிறேன், கண்டிப்பாக பணம் வந்த பிறகு தான் திருமணம் என்றவாறு கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full