நான் ஜிம் திறக்க இது தான் காரணம் - பிக் பாஸ் பிரபலம் மணிகண்டன் சொன்ன தகவல்

By subhashini · 3/4/2025

தன்னுடைய கடின உழைப்பால் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் மணிகண்டன். இவர் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணா. முதலில், மணிகண்டன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவள்’ சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். இவர் வெள்ளித் துறையில் சில படங்களில் நடித்திருந்தாலும் இவரால் தனது தங்கை போல் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை.

அதன் பின் இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியிலும் அவரால் டைட்டிலை கைப்பற்ற முடியவில்லை. இதற்கிடையே, மணிகண்டன் தன்னுடன் நடித்த நடிகை சோபியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரியன் என்கிற மகனும் இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்த சோபியா தற்போது மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, மணிகண்டன் மற்றும் சோபியா விவாகரத்து பெற்று பிரிந்ததாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி இருந்தது.

மணிகண்டன் குறித்த தகவல்:

அதற்குப்பின் இவர்கள் இருவரும் பிரியவில்லை என்று கூறப்பட்டது. தற்போது நடிகர் மணிகண்டன் அவர்கள் மெட்ராஸ் பிட்னஸ் ஜிம்மை தொடங்கியிருக்கிறார். இந்த ஜிம்மை நடிகர் விஜய் சேதுபதி தான் திறந்து வைத்திருக்கிறார். இந்த திறப்பு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ், வைபவ், பப்லு உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மணிகண்டன், நான் சினிமா சீரியலில் நடிப்பதற்கு முன்பு கால் சென்ட்ரலில் தான் வேலை செய்திருந்தேன். 5 வருடம் தொடர்ச்சியாக நைட் சிப்ட் தான் செய்தேன். லேட்நைட் சாப்பிடுவது, எழுவது என்று இருந்ததால் ஓவராக வெயிட் போட்டுவிட்டேன்.

மணிகண்டன் பேட்டி:

என்னுடைய வெயிட் 100 கிலோ மேல் இருந்தது. அதனால் ஜிம்முக்கு போய் வெயிட் லாஸ் பண்ணேன். எனக்கு அது ஒரு புது நம்பிக்கை கொடுத்தது. அதிலிருந்து என் உடம்பை நேசித்து தொடர்ச்சியாக ஜிம் போக ஆரம்பித்தேன். என்ன பிரச்சனையாக இருந்தாலும் பிட்னஸில் மட்டும் ரொம்ப கவனமாக இருப்பேன். இப்போது வரைக்கும் ஜிம் போய்க்கொண்டு தான் இருக்கிறேன். நான் எடையை குறைத்த பிறகு தான் சீரியல் சினிமாவில் நடிக்க மீண்டும் வாய்ப்பு வந்தது. ஜிம்முக்கு போவது வெறும் உடல் பிட்னஸ் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. அது நம் மனசுக்கும் தன்னம்பிக்கையும் தெம்பையும் கொடுக்கும். உடம்புக்கு ஆக்டிவிட்டி கொடுக்கும்போது செம எனர்ஜியாக இருப்போம்.

https://www.youtube.com/watch?v=0NjhL8Mp07Y

ஜிம் திறக்க காரணம்:

அதே மாதிரி ஜிம் போய் தான் குறைக்கணும் என்று அவசியம் கிடையாது. நிறைய வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அதில் ஒன்றுதான் ஜிம். ஃபிட்னஸ் மட்டும் இல்லாமல் புது மனிதர்கள், புது சூழ்நிலை அறிமுகம் நமக்கு கிடைக்கும். ஜிம் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். கஷ்டமான ஒர்க் அவுட் கூட ஜாலியாக ரிலாக்ஸ் ஆக செய்யலாம். இன்னும் சொல்ல போனால் நிறைய பேர் ஜிம் வந்து தான் காதலித்து திருமணம் செய்கிறார்கள். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான உலகம் தான் ஜிம். ஜிம் போன பிறகுதான் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அப்படி ஜிம் நாலெட்ஜ் இருக்கிற நண்பர்களோடு தான் ஆழ்வார்பேட்டையில் நல்ல இடமாக பார்த்து ஜிம் ஆரம்பித்திருக்கிறோம்.

ஜிம் பற்றி சொன்னது:

வெறும் ஜிம் என்பது மட்டும் இல்லாமல் லைப் ஸ்டைல் பிட்னஸ் ஆக மாற்றுவது தான் எங்களுடைய ஐடியா.
பல ஜிம்களில் அறைகள் சின்ன சின்னதாக இருக்கும். எங்களது ரொம்ப பெருசு, தாராளமாக இருக்கும். 7000 சதுர அடி அளவுக்கு வைத்திருக்கிறோம். கார்டியாவுக்கு மட்டுமே தனி ப்ளோர், ஜூம்பா டான்ஸ்க்கு தனியா ஃப்ளோர் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி புளோர். எங்ககிட்ட சான்றிதழ் பெற்ற 10 ட்ரெயினர் இருக்கிறார்கள். விஜய் சேதுபதி சார் ரொம்ப நல்ல மனிதர். எந்த விஷயம் பண்ணினாலுமே ஊக்குவிப்பார். அவருக்கு இந்த நேரத்தில் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே மாதிரி இந்த ஜிம் ஆரம்பிக்க ரொம்ப என்கரேஜ் பண்ணது என்னுடைய தங்கை ஐஸ்வர்யா தான். நிறைய பிரபலங்கள், தொழிலதிபர்கள் எல்லோரும் வருவதாக சொல்லி இருக்கிறார்கள் என்று நெகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full