இந்த சீசன் கோயம்பேடு சந்தைக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருக்கு - பிக் பாஸ் நாடியா சாங் ஓபன் டாக்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 37 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இந்த முறை நிகழ்ச்சியில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
பிக் பாஸ் 9:
குறிப்பாக, சோசியல் மீடியாவில் பிரபலமாக உள்ளவர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டுவிட்டு கத்துவது, மோசமாக பேசுவது என்று நிகழ்ச்சி தொடர்பாக விமர்சனங்கள் செய்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று நிகழ்ச்சி நடத்தும் செட்டுக்கே சென்று ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் போட்டியாளருமான நாடியா சாங் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டிருந்தேன். 2 வாரம் தான் இருந்தேன். அந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப நல்ல அனுபவத்தை தந்தது.
நாடியா சாங் பேட்டி:
பிக் பாஸ் போயிட்டு வந்தாலே பெரிதாக எந்த லாபமும் இல்லை என்பதை நான்
ஏற்றுக் கொள்ள மாட்டேன். 90 நாள் அந்த வீட்டில் இருந்துவிட்டு வெளியில் வந்து காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள். ஒரே மாதத்தில் வெளியில் வந்தாலும் அந்த நிகழ்ச்சி அடையாளம் தந்தவர்களும் இருக்கிறார்கள். நான் கலந்து கொண்ட சீசனுக்கு பிறகு சில சீசன்கள் பார்க்கவில்லை. வார இறுதி எபிசோடு மட்டும்தான் கமல் சாருக்காக பார்த்தேன். ஆனால், இந்த சீசன் கொஞ்சம் ஃப்ரீயாக இருந்ததால் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினேன். மூன்று நாள்தான் பார்த்திருப்பேன். அதுக்கு மேல முடியவில்லை. சென்னையில் கோயம்பேடு ஏரியாவில் மார்க்கெட்டுக்கு போயிருக்கிறேன். அந்த சந்தையில் நுழைந்த ஒரு ஃபீலிங் இருக்கு.
நிகழ்ச்சி பற்றி சொன்னது:
ஆளாளுக்கு கத்தி கூச்சல் போட்டுக் கொண்டே இருக்காங்களே ஏங்க? இப்படி எல்லாம் கத்திக்கொண்டு இருந்து தான் நிகழ்ச்சியில் தொடரலாம்னு யாராவது சொன்னார்களா? என்று தெரியவில்லை. அதனால் இப்ப ப்ரோமோ. பார்க்கிறதோடு சரி திடீரென்று என்னைக்காவது பார்க்கணும்ன்னு தோணினால் பார்ப்பேன். மத்தபடி தினமும் விடாமல் பார்ப்பது கிடையாது. விஜய் சேதுபதி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிறார். ஒரு நடிகராக அவருடைய நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், அவர் வந்த பிறகு நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரி தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.