Live ல் ஓவியாவிற்கு முத்தம் கொடுத்த நபர் - இவர் தான் காதலரா? வைரலாகும் வீடியோ

By Manikandan · 17/1/2023

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் ஓவியா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் விமல் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் தான் ஓவியா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு மலையாளத்தில் கங்காரு என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவியா பற்றிய தகவல்:

பின் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார். பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்ற ஆர்மியே இவரால் தான் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இவருடைய எதார்த்தமான குணமும், பேச்சும் ரசிகர்கள் மத்தியில் இவரை ரசிக்க வைத்தது. இதற்கு பிறகு இவர் பல படங்களில் கமிட்டானார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் முன்னணி நடிகையாக முன்னேற முடியவில்லை.

பிக் பாஸ் காதல் :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ். ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர் மீது தீராத காதலில் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ராஹி என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்து கொண்டுள்ளார் ஆரவ். நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம் 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு செல்லவில்லை :

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஆரவ்வை உருகி உருகி காதலித்து வந்த ஓவியா திருமண நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல ஒவியா சமூக வலைதளத்தில் கூட ஆரவ்விற்கு எந்த ஒரு வாழ்த்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தான் நடிகை ஓவியா பற்றி சோசியல் மீடியாவில் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ :

அந்த வீடியோவில் நடிகை ஓவியா பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தீடீரென ஒருவர் அவருக்கு முத்தம் கொடுக்குமாறு வந்தார். விடியோவை பார்க்கும் போது நடிகை ஓவியாவுடன் நெருக்கமாக இருக்கும் ஆவர் காதலரா, திருமணம் செய்து கொள்ள போகின்றனரா அல்லது இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனரா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நடிகை ஓவியாவின் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full