அஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..!

By Rajkumar · 14/12/2018

நடிகர் நகுலுக்கு ஜோடியாக ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’என்ற படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா. தமிழில் ‘பாயும் புலி’, ‘அச்சாரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் பெரிதாக அறியப்படாத நடிகையாகவே இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், இறுதி போட்டி வரை வந்து இரண்டாம் இடத்தை தட்டி சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சிம்பு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

நெடுஞ்சாலை பட நடிகர் ஆரியுடன் புதிய படத்தில் கை கைகோர்த்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா.காதல் கதையாக உருவாக உள்ள பெயரிடபடாத இந்த புதிய படத்தை “அய்யனார்” படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மஹத் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று துவங்கியது. இன்று தான் அஜித் 59 படத்தின் பூஜையையும் துவங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மஹத் ஐஸ்வர்யா நடிக்கவிருக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் பிரபு ராம் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படம் ரொமான்டிக் காமெடி படமாக எடுக்கப்பட உள்ளதாகவு இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full