குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக் பாஸ் ராஜு கலந்து கொள்ள இது தான் காரணம் - அவரே சொன்ன பதில்

By subhashini · 11/5/2025

குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் பிக் பாஸ் ராஜூ ஜெயமோகன் கலந்திருக்கும் காரணம் குறித்து தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலாமன நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி’ ஒன்று. இதுவரை இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிந்து ஆறாவது சீசன் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

மேலும், நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் கடந்த முறை நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி 5 நிகழிச்சியில் களம் இறங்கி இருந்தார். அதோடு இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களையும் மீடியா மேஷன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இவர்கள் விஜய் டிவியில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதோட ஐந்தாவது சீசனையும் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் வெளியேறிட்டார்கள்.

குக் வித் கோமாளி:

அதனால் தான் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி விட்டார். கடந்த சீசன் தான் பல சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியாக இருந்தது. கடந்த ஐந்தாவது சீசன் டைட்டில் பட்டதை பிரியங்கா தான் பெற்றிருந்தார். தற்போது
குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை ஆட்டம் புதுசு, புது ஸ்கூல், புது ரூல், புது ஜட்ஜ் என்று ஏற்கனவே இருந்த இரண்டு நடுவர்களுடன் மூன்றாவது நடுவராக செஃப் கௌஷிக் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இந்த சீசனில் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், உமர் லத்தீப், ஷபானா, விவசாயி நந்த குமார், நடிகை மதுமிதா, மெரீனா கடற்கரை சுந்தரி அக்கா, யூடியூப் பிரபலம் செளந்தர்யா சில்லுகுரி, பிக் பாஸ் பிரபலம் ராஜு, நடிகர் கஞ்சா கறுப்பு ஆகியோர் களமிறங்கியிருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி 6:

இவர்களுடன் புது கோமாளிகளாக பிக் பாஸ் செளந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் குமார், கானா பாடகர் பூவையார் மற்றும் டோலி ஆகியோர் இணைந்து இருக்கிறார்கள். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. முதல் நாளில் காமெடி, கலாட்டாக்கள் என்று இருந்தது. மேலும், இந்த சீசனில் குக்காக பிக் பாஸ் ராஜூ கலந்து இருக்கிறார். இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருப்பதற்கான காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் வந்தார். முதலில் இவர் நடிகர் பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடித்தார்.

ராஜு குறித்த தகவல் :

இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார். பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் ராஜூ நடித்திருந்தார். அதன் பின் இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையாக விளையாடி முதல்பரிசை தட்டி சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதற்கு பிறகு இவரே ஒரு வெப் சீரிசை எழுதி இயக்கி நடித்திருந்தார். ஆனால், அந்த வெப் சீரிஸ் பெரிதாக பேசப்படவில்லை.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரணம்:

தற்போது நடிகர் ராஜு ஹீரோவாக பன் பட்டர் ஜாம் படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். Gen Z தலைமுறையினரின் ரிலேஷன்ஷிப்பை பற்றிய கதை தான் பன் பட்டர் ஜாம். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆனால், இந்த படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது. இதனால் மக்கள் இவரை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு பிளாட்பார்ம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் இவர் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இதை அவரே நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full