வேற லெவல்ப்பா, உண்மையிலே தியேட்டரில் பார்க்கணும் - விஜய் சொன்னதாக பிக் பாஸ் ராஜு பகிர்ந்த தகவல்

By subhashini · 25/6/2025

விஜய் பற்றி பிக் பாஸ் பிரபலம் ராஜூ ஜெயமோகன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் பிக் பிரபலமாக இருப்பவர் ராஜு ஜெயமோகன். இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார். முதலில் இவர் நடிகர் பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் இவர் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார். பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் ராஜூ நடித்திருந்தார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மேலும், சின்னத்திரை பிரபலத்தின் மூலம் ராஜுவுக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் திறமையாக விளையாடி முதல்பரிசை தட்டி சென்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ராஜு:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த வகையில் இவர் ராஜு ஊட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்ததாக கூறப்பட்டது. ஆனால், அது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது நடிகர் ராஜு ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=2LfPK3L8VBY

ராஜு நடிக்கும் படம்:

இவர் Rain of Arrows Entertainemt நிறுவனத்தின் கீழ் சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிக்கும் படத்தில் தான் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு பன் பட்டர் ஜாம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இந்த படத்தில் ராஜூவுக்கு ஜோடியாக பவ்யா த்ரிகா நடிக்கிறார்.
இவர்களுடன் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, விஜே பப்பு, மைக்கேல் தங்கதுரை, சார்லி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

Gen Z தலைமுறையினரின் ரிலேஷன்ஷிப்பை பற்றிய கதை தான் பன் பட்டர் ஜாம். ஒருவருக்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை முழுமையாக ஏற்று வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதை தான் இயக்குனர் நகைச்சுவை கலந்த பாணியில் கொடுத்திருக்கிறார். இந்த படம் ஜூலை 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய ஸ்டீலர் காட்சி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதில் ராஜு அவர்கள் மற்ற படங்களுடைய காட்சிகள் எல்லாம் பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். குறிப்பாக, விஜயினுடைய ஸ்டைலில் எக்ஸ் வடிவில் கையை வைத்து டாட்டா காட்டும் சீன் வேற லெவல்.

ராஜு டீவ்ட்:

இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக தளபதி விஜய் கூறியதாக ராஜு போட்டிருக்கும் ட்வீட் தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில், அன்புக்குரிய தளபதி விஜய் அண்ணாவிடம் இருந்து எனக்கு கால் வந்தது. வேற லெவல் பா, உண்மையாகவே தியேட்டரில் பார்க்கணும் என தோன்றியது என்று கூறியிருந்தார். வேறு என்ன எனக்கு வேண்டும்? நான் தளபதியை சிரிக்க வைத்திருக்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய விஷயம். நன்றி தலைவா. என் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்க வேண்டிய நாள் என்று கூறியிருக்கிறார். இவருடைய பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full