விஜய் 63 யின் அப்டேட் எப்போது.! தயாரிப்பாளர் அதிகாரபூர்வ ட்வீட்.! ரசிகர்கள் குஷி.!

By Rajkumar · 19/6/2019

சர்காரின் மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 

https://twitter.com/archanakalpathi/status/1141050741273923584

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல்  பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இதையும் பாருங்க : நடிகை ஜெனிலியாவிற்க்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா.! புகைப்பட தொகுப்பு.! 

இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் இந்த படத்தை பற்றிய வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அப்படியே இந்த படத்தின் அப்டேட் என்று படக்குழு வெளியிட்டாலும் அது ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்த ஒரு விடைமயமாகவே இருந்து வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் அப்டேட் குறித்து ட்வீட் செய்த தயரிப்பாளர், 'உங்களை போல நானும் தயாரிப்பாளரிடம் அப்டேட் கேட்டுகொண்டே இருக்கும் ஒரு சாதாரண நபர் தான் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். தளபதி 63 யின் அப்டேட் குறித்து நேரத்தில் வெளியாகும். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நாங்கள் நேரம் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம் ' என்று ட்வீட் செய்திருந்தார்.

https://twitter.com/BGangz/status/1141055226578911233

https://twitter.com/TFC_Off/status/1141153024770887680

மேலும், இந்த படத்தின் அப்டேட் இந்த வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது. இந்த நிலையில் இன்று (ஜூன் 19 ) இந்த படத்தின் அப்டேட் குறித்து ட்வீட் செய்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. அதில் 'இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63 யின் அப்டேட். காத்துக்கொண்டிருங்கள்' என்று ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full