பிக் பாஸ் ரித்விகா அப்பா, அம்மா, தங்கச்சிய பாத்திருக்கிங்களா..? புகைப்படம் இதோ..!

By Ajju · 10/8/2018
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிட்சியமான பல முகங்கள் போட்டியாளராக பங்குபெற்றுள்ளனர். அந்த வகையில் நடிகை ரித்விகா தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமான ஒரு போட்டியாளர் தான். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள ரித்விகா, தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். சேலத்தில் பிறந்த ரித்விகா, சிறு வயது முதலே நடிப்பில் பெரும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். தனது கல்லூரி படிப்பதை முடித்துவிட்டு குறும்படங்கள், விளம்பர படங்கள் என்று நடித்துக்கொண்டிருந்த ரித்விகாவிற்கு முதன் முதலில் பாலா இயக்கிய 'பரதேசி" படத்தின் மூலம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரித்விகா ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண பெண் தான். இவரது அப்பா ஒரு வெல்டராகவும், அம்மா குடும்ப தலைவியாகவும் இருந்து வருகின்றனர். மேலும், நடிகை ரித்விகாவிற்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். ரித்விகா மட்டும்தான் திரைத்துறைக்கு சம்மந்தபட்டவராக இருந்து வருவதால் அவரது குடும்ப நபர்களை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் நடிகை ரித்விகாவின் குடும்ப புகைப்படம் ஒன்று நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் அவரது அம்மா, அப்பா, சகோதரி என அனைவருமே இருக்கின்றனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full