பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளர் இவரா ?

By ·

தொலைக்காட்சிகளில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் அதில் ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தியில் பல சீசன்களை கடந்து இந்த நிகழ்ச்சி கடந்த 2011-ம் ஆண்டு தான் தமிழில் ஒளிபரப்பானதும் அதன் பின்னர் தெலுங்கு கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் அறிவிப்பை இந்த நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டு இருந்தார். தற்போது போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியும் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை சூசனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் தற்போது ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரியா பவானி ஷங்கருக்கு பெரும் தொகை அளிக்கவும் எண்டிமால் நிறுவனம் தயாராக இருக்கிறதாம். ஆனால், தற்போது ப்ரியா பவானி சங்கர் படங்களில் பிசியாக இருந்து வருவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சற்று யோசித்து வருகிறதாம். இருப்பினும் எப்படியாவது ப்ரியா பவானி சங்கரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனராம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full