Bigg Boss 3 Tamil : இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல ஆட்டத்த.! இவங்க தான் இந்த சீசன் யாஷிகா போல.!

By ·

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று (ஜூன் 23) துவங்கியது. விஜய் தொலைக்காட்சியில் இன்று இரவு 8 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் போட்டியாளர்களை அறிமுகம்செய்து வைத்தார்.

https://twitter.com/vijaytelevision/status/1142998278897750016

இதற்கான பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் சற்று நேரத்தில சீசன் 3 க்காண கொண்டாடட்டம் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த சீசனில் பங்குபெற போகும் போட்டியாளர்களை பற்றிய விவரங்கள் ஏற்கனவே நமது இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

இதையும் பாருங்க : தண்ணீர் பஞ்சத்தால் பிக் பாஸ் வீட்டில் கமல் செய்துள்ள புதிய மாற்றங்கள்.! குவியும் பாராட்டு.! 

அந்த லிஸ்டில் இல்லாத இரண்டு போட்டியாளர்களின் என்ட்ரி நமக்கு ஷாக்கை. கொடுத்தது அதில் ஒருவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா என்பவரும், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரேஷ்மாவும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊலால ஊலால' பாடலுக்கு காலையில் நடனமாடுகின்றனர். வழக்கம் போல இதில் அறைரை ஆடையிலும் ஆடும் பெண் போட்டியாளர்களும் இருக்கின்றனர். அந்த சாக்ஷி அகர்வால் அறை ட்ராயருடன் நடனமாடிக்கொண்டிருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது சாக்ஷி தான் இந்த சீசனின் யாஷிகாவாக இருப்பார் என்று எதிர்பார்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full