Bigg Boss 3 : மாஸா என்ட்ரி குடுக்கர்து பெர்சில்ல.! கமலின் பட லோக்கல் ப்ரோமோ இதோ.!

By Rajkumar · 20/6/2019

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. கடந்த சில வாரங்களாக 2 ப்ரோமோக்களை மாறி மாறி ஒளிபரப்பி வந்த விஜய் டிவி தற்போது அடுத்தடுத்து ப்ரோமோகளை வெளியிட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஞாயிற்றுகிழமை (ஜூன் 23) முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான பிரம்மாண்ட செட்களும் செட்களும் அமைக்கபட்டுள்ளது.

இதையும் பாருங்க : விஜய் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் உருவாக்கிய கேவலமான ஹேஸ் டேக்.! அதுவும் ட்ரெண்டிங்.! 

இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த ஜாங்கிரி மதுமிதா மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார். மற்ற போட்டியாளர்கள் பற்றிய விவரங்களை பிக் பாஸ் குழு வெளியில் கசிந்து விடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=LERAZkSNNZ0

மேலும், கமல் தேர்தல் களத்தை கண்டுவிட்டு அந்த சூடோடு இந்த நிகழ்ச்சியில் வர இருப்பதால் ப்ரோமோக்களில் சூசகமாக பல அரசியல் கலந்த வசனத்தையும் ப்ரோமோகளில் பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் அவர் என்ன பேசியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்.

முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி முதல் சீஸனின் அளவிற்கு இல்லை. எனவே, மூன்றாவது சீசன் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிகாத்துக்கொண்டிருக்கிறனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full