பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 6 போட்டியாளர்கள்.! உறுதியான தகவல் இதோ.!

By Rajkumar · 22/6/2019

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை (ஜூன் 23)துவங்க இருக்கிறது. ஞாயிற்று கிழமை 8 மணிக்கு கோலாகலமாக இந்த நிகழ்ச்சி தூங்க இருக்கிறது. கடந்த சில வாரங்களாக 2 ப்ரோமோக்களை மாறி மாறி ஒளிபரப்பி வந்த விஜய் டிவி தற்போது அடுத்தடுத்து ப்ரோமோகளை வெளியிட்டு வருகிறது.

இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த ஜாங்கிரி மதுமிதா மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார். மற்ற போட்டியாளர்கள் பற்றிய விவரங்களை பிக் பாஸ் குழு வெளியில் கசிந்து விடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஜாங்கிரி மதுமிதாவை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகரும், கர்நாடக இசை கலைஞருமான மோகன் வைத்யா கலந்துகொள்ள போவதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. பாடகரான மோகன் வைத்யா தமிழில் அந்நியன், சேது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : கழுத்தில் சிலவை.! நெற்றியில் குங்குமம்.! பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டர்.! 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் மற்ற போட்டியாளர்களை பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சேரன். பவர் ஸ்டார், பருத்தி வீரன் சரவணன், பாத்திமா பாபு ஆகியோர் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளனர் என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. மற்ற போட்டியாளர்களை பற்றிய விவரங்கள் கிடைத்தவுடன் விரைவில் அறிவிக்கிறோம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full