கேள்வி கேட்க நான் ரெடி.! மறுபடியும் வாக்களிக்க நீங்க ரெடியா.! அடுத்த ப்ரோமோ.!

By Rajkumar · 21/6/2019

பிக் பாஸ் ப்ரோமோகளை உலகநாயகன் கமல் தனது சொந்த அரசியல் மேடையாகவே மாற்றி வருகிறார் என்ற எண்ணம் தான் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் வெளியாகி வரும் பிக் பாஸ் ப்ரோமோ அனைத்திலும் காமலின் அரசியல் கலந்த வசனங்கள் மிகவும் அழுத்தமாகவே இருக்கிறது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை மறுநாள் துவங்க இருக்கிறது. ஞாயிற்று கிழமை 8 மணிக்கு கோலாகலமாக இந்த நிகழ்ச்சி தூங்க இருக்கிறது. கடந்த சில வாரங்களாக 2 ப்ரோமோக்களை மாறி மாறி ஒளிபரப்பி வந்த விஜய் டிவி தற்போது அடுத்தடுத்து ப்ரோமோகளை வெளியிட்டு வருகிறது.

இதையும் பாருங்க : யோகி பாபுவுடன் காதல்.! ‘புஷ்பா புருஷன்’ புகழ் ரேஷ்மா அளித்த ஷாக்கிங் பேட்டி.! 

இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த ஜாங்கிரி மதுமிதா மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார். மற்ற போட்டியாளர்கள் பற்றிய விவரங்களை பிக் பாஸ் குழு வெளியில் கசிந்து விடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=tkRIrY17-jY

மேலும், கமல் தேர்தல் களத்தை கண்டுவிட்டு அந்த சூடோடு இந்த நிகழ்ச்சியில் வர இருப்பதால் ப்ரோமோக்களில் சூசகமாக பல அரசியல் கலந்த வசனத்தையும் ப்ரோமோகளில் பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் அவர் என்ன பேசியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்.

முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி முதல் சீஸனின் அளவிற்கு இல்லை. எனவே, மூன்றாவது சீசன் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிகாத்துக்கொண்டிருக்கிறனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full