தண்ணீர் பஞ்சத்தால் பிக் பாஸ் வீட்டில் கமல் செய்துள்ள புதிய மாற்றங்கள்.! குவியும் பாராட்டு.!

By Rajkumar · 24/6/2019

கோடை காலம் துவங்கிய சிறிது நேரத்திலேயே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடத் துவங்கியது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அத்யாவசியமாக தேவைப்படும் குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலமும் நேர்ந்தது.

கோடைகாலம் துவக்கத்திலேயே சென்னையின் பல முக்கிய இடங்களான, அண்ணாநகர், சூளைமேடு, திருவல்லிக்கேணி, வடபழனி, அசோக்நகர், நெசப்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் வறட்சி ஏற்பட்டுள்ளது. இது சென்னை மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தண்ணீர் பஞ்சத்தை மனதில் கொண்டு வரவேற்கதக்க சில மாற்றங்களை செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று (ஜூன் 23) துவங்கியது. முதல் நாளான நேற்று போட்டியாளர்களை அறிவிக்கும் முன்பாக கமல் பிக் பாஸ் வீட்டை விவரித்துக்கொண்டிருந்தார்.

பிக் பாஸ் வீட்டினுள் செய்யப்பட்ட சில மாற்றங்களை நேயர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் கமல். அப்போது நீச்சல் குளத்தை கண்ட கமல் 'சொன்னதை செய்தார்களா என்று பார்த்தேன். செய்துவிட்டார்கள். ஊரே தண்ணி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது இங்கே ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தால்.

பணக்காரத் திமிரு என்று கோபம் வரும். இந்த கோபம் ஏழைகளுக்கும் வரும் பணக்காரர்களுக்கும் வரும். அதனால் நீச்சல் குளத்தில் தண்ணீர் வேண்டாம் என்று நான் கூறினேன். அவர்கள் நீச்சல் குளமே வேண்டாமா என்று என்னிடம் கேட்டனர். இருப்பினும் தண்ணீருக்காக வெளியில் படும் கஷ்டத்தை பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அறிந்து கொள்ள இந்த வெற்றான நீச்சல் குளம் மட்டும் இருக்கட்டும்' என்று கூறினார் கமல்.

அதுமட்டுமல்ல சமையல் அறையில் கூட அளவற்ற தண்ணீர் எல்லாம் கிடையாது. சமையல் அறையில் கூட அளவான தண்ணீர் தான் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும். இதற்காக தண்ணீரை குறிக்கும் ஒரு அளவு கோளும் சமையல் அறையில் பொறுத்தப்பட்டுள்ளது. தமிழகமே தண்ணீர் பஞ்சத்தில் அல்லோல்பட்டு வரும் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்துள்ள இந்த மாற்றம் பலராலும் வரவேற்கபட்டுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full