Bigg Boss 3 Tamil : கவினுக்கு கழிவறை டாஸ்க் கொடுத்த தர்சன்.! முகம் சுழிக்கும் வார்த்தையை பேசிய சித்தப்பு.! இதை நோட் பன்னீங்களா.!

By ·

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று (ஜூன் 24) முதல் நாள் என்பதால் போட்டியாளர்களுக்கு சில ஜாலியான டாஸ்க் வழங்கப்பட்டது. அந்த வகையில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு குழுவாக அமர்ந்து கொண்டு ஒரு போட்டியாளரை அவர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு அந்த போட்டியாளர் கோபப்படாமல் பதிலளிக்க வேண்டும். அவர் அளிக்கும் பதில் மற்ற போட்டியாளர்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் அவர்களை மாலை அணிவித்து மீண்டும் குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் சக போட்டியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். அப்போது நடன இயக்குநரான சாண்டிக்கு நள்ளிரவில் வெறி நாய் துரத்துவது போன்றும், திருடி விட்டு அழாமல் மன்னிப்பு கேட்பது போன்ற டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை சிறப்பாக செய்தார் சாண்டி.

இதையும் பாருங்க : ஆடை படத்தில் அமலா பாலின் ஆடையில்லா காட்சியை எப்படி எடுத்துள்ளார்கள் பாருங்கள்.! 

அதேபோல மோகன் வைத்திய சாண்டியை நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் மாறி மாறி பேசிய டாஸ்க் ரசிக்கும்படியாக இருந்தது. இவர்களுக்கு அடுத்து டாஸ்க் செய்த ரேஷ்மாவிற்கு சக போட்டியாளராக தர்ஷன் திருமணம் முடிந்து விட்டு முதலிரவில் நீங்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும் என்று கூறினார்.

அந்த டாஸ்கயும் ரேஷ்மா முகம் சுழிக்காமல் செய்து முடித்தார். இதே போல கவினுக்கு டாஸ்க் கொடுத்த தர்ஷன் 'பாத் ரூமில் யாரோ சென்று வந்து விட்டார்கள் அதனை நீங்கள் எப்படி சுத்தம் செய்வீர்கள் ' டாஸ்க் கொடுத்தார். அதனையும் கவின் செய்து முடித்தார். அப்போது தர்ஷன் அருகில் இருந்த சரவணன் அவனே ஒரு **(shit) அவனிடம் போய் அதை பற்றி கேட்கிறீர்களே என்று கேவலமாக கமன்ட் அடித்தார். இதனை சக போட்டியாளர்கள் யாரும் கவனிக்கவில்லை.

https://twitter.com/BiggBossAddict/status/1143200156730347520

இந்த டாஸ்கை கண்ட பலரும் முதலறிவு, கழிவறை என்று டாஸ்க் கொடுத்த தர்சனை சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர். அதே போல காமெடி என்ற பெயரில் சரவணன் பேசியதையும் மிகவும் கடிந்து வருகின்றனர். சரவணன் பேசிய அந்த முகம் சுழிக்கும் வார்த்தையை நீங்கள் ஹாட் ஸ்டாரினல் 49 நிமிடம் 18 நொடிகளில் கேட்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full