ஆரி முதல் ஆஜீத் வரை பிக் பாஸ் சம்பளம் விவரம் - 10000 ஆயிரம் கூட வாங்கி இருகாங்க.

By Rajkumar · 18/1/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்றோடு ஜனவரி 17) நிறைவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

அதே போல இறுதி போட்டிக்கு ஒரு சில நாள் மட்டுமே இருந்த நிலையில் கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துகொன்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். இறுதியில் ரியோ மூன்றாம் இடத்தையும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் ஆரி முதல் இடத்தையும் பிடித்தார். ஆரிக்கு பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸுக்கு பின் ஆரி பதிவிட்ட முதல் பதிவு - இதான் அவருடைய தங்கமான மனசு.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பிரபலத்திற்கு ஏற்றார்போல சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இம்முறை போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்டள்ள போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயும் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு பத்தாயிரம் ரூபாயும் போட்டியாளர்கள் பெற்றுள்ளனர்.

பெண் போட்டியாளர்களின் அதிகபட்சமாக ரேகா மற்றும் சனம் ஷெட்டி ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் பெற்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து சுசித்ரா 80,000 ரூபாய் அதிகப்படியான சம்பளம் வாங்கினார். ஆனால், அவர் ஒரே வாரத்தில் வெளியேறிவிட்டார் சுசித்ராவை தொடர்ந்து ரம்யா பாண்டியன் மற்றும் அர்ச்சனா 75,000 கேப்ரில்லா 70,000 ஷிவானி 60,000 அனிதா, நிஷா, சம்யுக்தா ஆகியோர் 40,000 சம்பளமாக பெற்றுள்ளனர். அதே போல ஆண் போட்டியாளர்களின் ஒரு நாளைக்கு அதிகபட்ச சம்பளமாக ஆரி 85,000 ரூபாய்யை பெற்றுள்ளார்.

 ரமேஷின் சம்பளம் ரூ.60,000. பாடகர் வேல்முருகனுக்கு ரூ.50,000. ரியோவுக்கு ஒருநாளுக்கு ரூ.35,000. ஆஜித்துக்கு ரூ.15,000. பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் மூவருக்கும் நாளொன்றுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டு இருக்கிறது. யார் யார் எத்தனை நாட்கள் இருந்தார்களோ அந்த நாட்களை கணக்கு செய்து வரி பிடித்தம் போக மீதி கையில் கிடைக்கும். இதில்  நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் விரும்பி வழங்கும் பரிசுப் பொருட்களும் தனி என்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full