கையில் பிக் பா கோப்பையுடன் போட்டியாளர் - லீக்கான புகைப்படம் இதோ.

By Rajkumar · 17/1/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்றோடு நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

https://twitter.com/RazzmatazzJoe/status/1350525603217227777

இந்த சீனில் பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவிவந்தது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியாகவே இருந்தது

இந்த சீசன் இறுதி போட்டிக்கு சோம் சேகர் டிக்கெட் டு பின்னாலே டாஸ்க்கை வென்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். கடந்த வியாழக்கிழமை நிகழ்ச்சியில் கேப்ரில்லா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.இந்த சீசனில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நபர்களில் கேப்ரில்லா மற்றும் சோம் சேகர் இருவருக்கும் மூன்றாம் இடம் கிடைப்பது கூட சந்தேகமே. எனவே, கேப்ரில்லாவின் இந்த முடிவை பலரும் பாராட்டி இருந்தனர்.

https://twitter.com/RazzmatazzJoe/status/1350515645549432834

இந்த சீசனில் ஆரி தான் டைட்டிலை வெல்வார் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம். அதே போல ஆரிக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு இருந்த வாக்கு வித்யாசம் மிகப்பெரிய அளவில் இருந்து வந்ததாம். அதிலும் ஆரிக்கு 23 கோடி வாக்குகள் வந்திருக்கிறது என்று ஜோ மைக்கேல் பதிவிட்டுள்ளார். அதே போல பாலாஜிக்கு வெறும் 4 கோடி வாக்குகள் தான் வந்துள்ளது என்று பதிவிட்டுள்ள அவர் சனம் ஷெட்டி மற்றும் அனிதா கையில் பிக் பாஸ் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full