முதல் இடத்திற்கு போட்டியே இல்லை. இரண்டாம் இடத்திற்கான போட்டியில் வென்றது இவருதான்.

By Rajkumar · 17/1/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்றோடு (ஜனவரி 17) நிறைவடைய இருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இறுதி போட்டி 6 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.

இந்த சீசனின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதே போல இன்று 6 மணி நேரம் பிக் பாஸ் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீசனில் ஆரி தான் டைட்டிலை வெல்வார் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம். அதே போல ஆரிக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு இருந்த வாக்கு வித்யாசம் மிகப்பெரிய அளவில் இருந்து வந்ததாம். அதிலும் ஆரிக்கு 23 கோடி வாக்குகள் வந்திருக்கிறது.

https://twitter.com/RazzmatazzJoe/status/1350525603217227777

சமீபத்தில் ரியோ தான் இரண்டாம் இடம் பிடித்திருந்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது வந்துள்ள உறுதியான தகவலின்படி பாலாஜி தான் இரண்டாம் இடம் பிடித்துள்ளாராம். மூன்றாம் இடத்தினை ரியோ பிடித்துள்ளாராம். அதே போல முதல் இடத்தில் வந்துள்ள ஆரி பெருவாரியான வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்திற்கு ரியோ மற்றும் பாலாஜிக்கு தான் போட்டி நிலவியதாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full