ப்ரோமோவில் கமல் சொன்ன இன்றைய குறும்படம் இதான் - வீடியோ இதோ.

By Rajkumar · 29/11/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் இந்த வார நாமினேஷனில் சம்யுக்தா வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் வெடித்தது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சம்யுக்தா, வளர்ப்பு மற்றும் கலீஜ் குறித்து பேசியது தான் கொஞ்சம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

https://www.youtube.com/watch?v=kTNo2aM_Kts&feature=youtu.be

தற்போது இந்த விஷயத்தில் இன்று கமல் குறும்படம் ஒன்றையும் போட்டுள்ளார். அது இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் காட்டப்பட்டது. சரி,அப்படி என்ன தான் குறும்படம் போட இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் கால் சென்டரில் மற்ற போட்டியாளர்கள் தங்களுக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டுவந்தனர். அந்த வகையில்கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ப்ரோமோ ஒன்றில் சம்யுக்தாவிற்கு சனம் ஷெட்டி கால் செய்துபேசி இருந்தார். அப்போது சம்யுக்தா நீங்கள் பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கிறீர்கள் ஆனால் வாயை திறந்தாலே கலீஜ் என்று கூறி இருந்தார்.

அதே போல மத்தவங்களுக்கு நான் கேப்டன் ஆனது அவ்வளவு வெறுப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று கூறிய சம்யுக்தா, அதற்கு என்ன காரணம் என்று சனம் கேட்டதற்கு அது அவங்களோட வளர்ப்பு என்று கூறி இருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ #Samyuktha ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்தது அதில் பலரும் சம்யுக்தாவிற்கு எதிராக ட்வீட்களை பகிர்ந்து வந்தனர்.

https://twitter.com/sivabal80/status/1331448287627362305

ஆனால், ஆரி 'வளர்ப்பு' பற்றி ஏன் பேசுறீங்க என்று கேட்ட போது, நீங்கள் ஏன் என் தாய்மையை பற்றி பேசினீர்கள் என்று வாக்கு வாதம் செய்தார். ஆனால், உண்மையில் ஆரி, அப்படி சொல்லவே இல்லை.அவர் சொன்னது சின்ன வயசா இருக்க ஆஜித்திற்கு அத்தனை மெச்சூரிட்டி தேவைப்படும் என்று நினைக்கும் நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாகி அவர்களின் மெச்சூரிட்டி அளவில் அப்படி இருக்கும்போது ஒரு கடமையை செய்ய தவறியதை சுட்டிக்காட்டிய பிறகு என்னை குறை சொல்லிவிட்டார் என்று கூறியுள்ளார் ஆரி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full