அடேங்கப்பா, இன்னிக்கு பிக் பாஸ் இத்தன மணி நேரமாம் - அப்போ குக் வித் கோமாளி ?

By Rajkumar · 17/1/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=8KbWapmfAw0

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.

கடந்த வியாழக்கிழமை நிகழ்ச்சியில் கேப்ரில்லா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.இந்த சீசனில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நபர்களில் கேப்ரில்லா மற்றும் சோம் சேகர் இருவருக்கும் மூன்றாம் இடம் கிடைப்பது கூட சந்தேகமே. எனவே, கேப்ரில்லாவின் இந்த முடிவை பலரும் பாராட்டி இருந்தனர்.

இந்த சீசனின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதே போல இன்று 6 மணி நேரம் பிக் பாஸ் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக் பாஸ் இறுதிப்போட்டி காரணமாக இன்று 6.30 க்கு ஒளிபரப்பாக இருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகது. இதுவரை ஹாட்ஸ் ஸ்டார் ப்ரீமியம் கணக்கில் இருப்பவர்களுக்கு கூட இன்றைய எபிசொட் ஒளிபரப்பபடவில்லை. எனவே, இன்று குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பபடவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full