பிக் பாஸ் கொண்டாட்டத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு படு மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள ஆரி - லீக்கான வீடியோ.

By Rajkumar · 28/1/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

https://twitter.com/shobana40502466/status/1354804445993811968

பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது.அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் வென்றார் ஆரி. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து 10 நாட்கள் ஆன நிலையில் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இதையும் பாருங்க : தனது கணவர் சையத்திற்காக மதம் மாறிவிட்டாரா ஆல்யா ? வைரல் புகைப்படம்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்றது. பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் விஜய்டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் கொண்டாடத்தில் ஆரி, விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு படு மாஸாக பைக்கில் வந்து மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

அது போக பிக் பாஸ் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்ட பலரும் புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்ட அனைவரும் இருக்க சனம் ஷெட்டி மற்றும் சுச்சத்ரா மட்டும் காணவில்லை. ஆனால், சனம் ஏற்கனவே பிக் பாஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதனால் சுச்சிக்கு மட்டும் அழைப்புவிடுக்கபடவில்லை என்று தெரிகிறது.

behindtalkies AMP · Quick view
View full