அந்த குப்பை ஷோக்கு போய் அடுத்துவங்களுக்காக காக்கூஸ் கழுவமாட்டேன் - பிக் பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்

By Rajkumar · 27/9/2020

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து லட்சுமி மேனன் சொல்லியுள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது.

இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. சமீபத்தில் இவரது ரீசன்ட் புகைப்படங்கள் சில வைரலானது அதில் முன்பை விட உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக இருந்ததை பார்த்து பலரும் வியந்து போனார்கள். அதே போல இவர் பிக் பாஸில் கலந்துகொள்ள போவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து நடிகை லட்சுமி மேனன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டிருந்தார்.

அதில், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை நான் மற்றவர்களின் எச்சி தட்டை கழுவவோ மற்றவர்களுக்காக கழிவறை கைகழுவவோ எப்போதும் மாட்டேன். அதேபோல நிகழ்ச்சி என்ற பெயரில் கேமராவுக்கு முன்னால் சண்டை போடவும் மாட்டேன். இந்த குப்பை நிகழ்ச்சியில் செல்ல போகிறேன் என்று யாரும் என்னிடம் பேச்சை எடுத்து வராதீர்கள் என்று கூறியிருக்கிறார். லட்சுமி மேனனின் இந்த கருத்து ரசிகர்களை கொஞ்சம் கோபமாகியுள்ளது. பிக் பாஸில் கலந்துகொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரர் விருப்பம். ஆனால், அதை சொல்லும் முறை என்று இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full