கமல் சாய்ஸ்ஸில் ஒரு போட்டியாளர் - அதுவும் இந்த பிரபல நடிகரின் மகன்.

By Rajkumar · 20/9/2020

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. இதனால் தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

ஆனால், தமிழில் எப்போது துவங்கும் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ் பிக் பாஸ் 4 துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சீசனில் கலந்துகொள்ள போவதாக பல்வேறு போட்டியாளர்களின் பெயரும் அடிக்கடி சமூக வலைதளத்தில் உலாவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சீஸனில் நடிகர் நாசர் மகன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் நாசர் கமலுடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் நாசர் மகனும் கமல் மகள் அக்சரா ஹாசன் கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பித்தக்கது. நாசர் மகனை கமல் சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவிப்பு வெளியான பின்னரே இந்த தகவலை நம்ப முடியும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full