அட, விடுங்க பாஸ் அமிர்தா இல்லனா என்ன, இந்த விஜய் டிவி நடிகை கன்பார்ம் பண்ணிட்டாங்களாம்.

By Rajkumar · 21/9/2020

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை, செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. இதனால் தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழில் இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியான நிலையில் வரும் அக்டொபர் மாதம் 4 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயர் பிக் பாஸில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதனை மறுத்து உள்ளார் நடிகை அமிர்தா ஐயர்.

இதனால் இளம் ரசிகர்கள் கொஞ்சம் அப்சட் அடைந்தனர். இருப்பினும் இந்த சீசனில் விஜய் டிவி சீரியல் நடிகை ஷிவானி உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ஷிவானிக்கு ஏற்கனவே சமூக வலைதளத்தில் பல லட்சம் இளம் ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே, இவர் பிக் பாஸ் உள்ளே போனா உடனே ஆர்மி தான்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full