பிக் பாஸில் கலந்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் சகோதரர். அதிகாரபூர்வ தகவல்.

By Rajkumar · 7/9/2020

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது தமிழில் கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே தெலுங்கிலும் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்து உள்ளது. பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் முதல் சீசனை முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கி வந்தார். இரண்டாவது சீசனை நாணி தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால், முதல் சீசனை போல இரண்டாவது சீசன் வரவேற்பை பெறவில்லை இதனால் மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி இருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. மேலும், இந்த சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் நடிகர்கள், தொகுப்பாளர், யூடுயூப் பிரபலங்கள் என்று பலர் கலந்து கொண்டு உள்ளனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் நடித்து வரும் சுஜிதாவின் சகோதரர், சூர்யா கிரண் என்பவர் கலந்து கொண்டு இருக்கிறார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஜிதா.

https://www.instagram.com/p/CE0dFFaBw1t/

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக வலம் வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்,தம்பிகளின் பாச கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். பாண்டியன் ஸ்டோஸ் சீரியலில் தனம்(அண்ணி) என்ற கதாபத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இந்த சீரியலை தெலுங்கில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதோடு தெலுங்கிலும் இவர் தான் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full