பிக்பாஸ் பிரபலம் அக்ஷரா புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவருக்கு ஜோடியாகும் ஹீரோ குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் ஆகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நான்கு சீசன்களை கடந்து தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார்? என்று யூகிக்க முடியாத அளவிற்கு போட்டியாளர்கள் திறமையாக விளையாடி வருகிறார்கள். மேலும், கடந்த வாரம் சஞ்சீவ் எலிமினேட் ஆனார்.

பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலருக்கும் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சில நாட்களிலேயே பட வாய்ப்பு பெற்றவர் அக்ஷரா மற்றும் வருண். பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் அக்ஷரா மற்றும் வருண் இருவருமே நல்ல நண்பர்களாக, நல்ல புரிதலுடன் விளையாடியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற உதாரணத்திற்கு விளக்கமாக ரெண்டு பேரும் இருந்தார்கள்.

Advertisement

பிக் பாஸ் வீட்டில் அக்ஷரா-வருண்:

இதனாலே இவர்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் திரண்டது. மேலும், பலரும் இவர்கள் இருவரையும் பாராட்டி இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு கடுமையான போட்டிகள் இருந்தாலும் அதை எதிர்கொண்டு விளையாடினார் அக்ஷரா. அதற்காகவே இவருக்கு ஒரு தனி ஆர்மி உருவானது. அதேபோல வருண் பெரிய இடத்து பிள்ளையாக இருந்தாலும் எந்த இடத்திலும் அதை வெளிப்படுத்தாமல் இயல்பாக நடந்து கொண்டது பலரையும் ஈர்த்தது.

எலிமினேட் ஆன அக்ஷரா மற்றும் வருண்:

சில வாரங்களுக்கு முன்பு தான் அக்ஷரா மற்றும் வருண் வெளியேறினார்கள். அதுமட்டுமில்லாமல் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத முதல் முறையாக டபிள் எவிக்ஷன் நடந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இவர்கள் இருவரும் ஒரே நாளில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இவர்கள் இருவரும் வெளியேறியதை குறித்து பலரும் எப்படி வெளியேற்றலாம்? என்று கொந்தளித்து போய் கருத்து போட்டு இருந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் அக்ஷரா-வருண் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

Advertisement

புது பட வாய்ப்பு:

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் இருவரும் ஒன்றாக ஒரே படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது வெளிவந்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த படத்தின் ரிலீசுக்காக வருண் காத்துக்கொண்டு இருந்த நிலையில் புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதுவும் அக்ஷரா மற்றும் வருண் இருவரும் ஜோடியாக நடிப்பதகாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

புது படத்தில் இணையும் அக்ஷரா மற்றும் வருண்:

இது அக்ஷரா மற்றும் வருண் ரசிகர்கள் மத்தியில் பயங்கர குஷியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஆனால், வருணின் மாமா ஐசரி கணேசன் நிறுவனம் வேல்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த படம் உருவாகிறது. இதைப் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement