மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று மாலை பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்தமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். ஆரம்பமே அசத்தல் என்பதுபோல இசை மூலம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கியது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக இசைவாணி அறிமுகமானார். இவர் தனக்கு உரிய கானா பாடலின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.

இந்நிலையில் இசைவாணி பற்றி பலரும் அறியாத விஷயங்களை இங்கு பார்க்கலாம். 24 வயதான இசைவாணி வடசென்னை பூர்வீகமாகக் கொண்டவர். இவரை அனைவரும் கானா இசைவாணி என்றுதான் அழைப்பார்கள். அப்பா சிவகுமார் ஆர்மோனியம் வாசிப்பவர். கச்சேரியின் கலைநிகழ்ச்சியில் இசைக் கலைஞராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் தன் அப்பாவுடன் பல கச்சேரிகளுக்கு என்று பாடி உள்ளார். பொதுவாகவே கானா என்றால் ஆண்கள் மட்டும் தான் என்ற எண்ணத்தை தன் குரல் மூலம் நீக்கியவர் இசைவாணி.

Advertisement

தன்னுடைய குரலின் மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இயக்குனர் P.ரஞ்சித்தின் The Casteless Collective குரூப் பாடிய மாட்டு கரி அரசியலை எடுத்துரைக்கும் வகையில் ‘பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பெண்கள் கால்பதிக்க தயங்கும் கானா இசை துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் இவருடைய கனவு, லட்சியம். மேலும், 2020 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய கானா திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு அங்கீகாரத்தை பதித்தார். அது என்னவென்றால் உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசையை தேர்வு செய்து பெருமைப்படுத்தியது பிபிசி.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே பெண் இசைவாணி தான். மேலும், இவர் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு கமலிடம் இவர் பல சுவாரசியமான விஷயங்களை மேடையில் பகிர்ந்தார். பிக் பாஸ் வீட்டில் இசை என்ன செய்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement
Advertisement